For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நம்ம ஆளுங்க செஞ்சததான் காங்கிரஸ்காரங்களும் ஜெய்ப்பூர்ல செய்றாங்க...

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: தமிழகத்தில் 2017 பிப்ரவரி மாதம் கூவத்தூர் மிகவும் பிரபலமானது. இதற்கு காரணம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விலை போகாமல் இருப்பதற்காக அங்கு இருக்கும் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அப்போது எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருந்த ஓட்டலுக்குள் உடற்பயிற்சியில் ஈடுபட்டு நேரத்தை போக்கி வந்தனர்.

இதற்குப் பின்னர் அதிமுக இரண்டாக உடைந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் தலைமையில் ஒரு கோஷ்டி உருவானது. இந்த 18 எம்.எல்.ஏ.க்களும் முதலில் புதுச்சேரியில் இருந்த கடற்கரை சொகுசு ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு மாற்றப்பட்டனர். இவர்கள் அனைவரும் தற்போது திமுகவில் இணைந்திருக்கும் தங்கக் தமிழ்ச்செல்வன் தலைமையில் இயங்கி வந்தனர். அப்போது அவர்கள் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

Rajasthan Cabinet Minister, MLAs seen doing exercise at Fairmont Hotel in Jaipur

அதேபோன்ற காட்சிகள்தான் தற்போதும் ஜெய்ப்பூருக்கு வெளியே இருக்கும் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு இருக்கும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் செய்து வருகின்றனர். இன்று இரண்டாவது முறையாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.கள் சட்டமன்றக் கூட்டம் அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டலிலேயே நடக்கிறது.

இன்று கூட்டம் துவங்குவதற்கு முன்பாக அமைச்சர் பிடி கல்லா, எம்.எல்.ஏ. ராம்நரைன் மீனா, ஹகம் அலி, கோபால் மீனா ஆகியோர் ஃபேர்மான்ட் ஓட்டலில் உடற்பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். இவர்கள் செய்யும் உடற்பயிற்சியை பார்க்கும்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டதுதான் நினைவுக்கு வருகிறது.

சச்சின் பைலட் vs அசோக் கெலாட்.. யாருக்கு எவ்வளவு பலம்? ராஜஸ்தானில் ஆட்சி கவிழுமா? - பின்னணி! சச்சின் பைலட் vs அசோக் கெலாட்.. யாருக்கு எவ்வளவு பலம்? ராஜஸ்தானில் ஆட்சி கவிழுமா? - பின்னணி!

English summary
Rajasthan Cabinet Minister, MLAs seen doing exercise at Fairmont Hotel in Jaipur
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X