For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜஸ்தானில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!!

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு... புதிய அமைச்சரவை பொறுப்பேற்பு!!
ராஜஸ்தான் மாநிலத்தின் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் இன்று அந்தப் பொறுப்பில் இருந்தும், மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து புதிய அமைச்சரவை வரும் ஜூலை 16 ஆம் தேதி பொறுப்பேற்கும் என்று முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்து இருக்கிறார். இன்று ஆளுநரை சந்தித்த முதல்வர் ஆட்சியில் ஏற்பட இருக்கும் மாற்றங்கள் குறித்து விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் கட்சிக்குள் நடந்து வந்த சிக்கல்களுக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இது நிரந்தரமானதா, தற்காலிகமானதா என்பதை வரும் அரசியல் நகர்வுகள்தான் முடிவு செய்யும். அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு 30 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் போதும். இந்த நிலையில்தான் தனக்கு 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக திடீரென துணை முதல்வராக இருந்து சச்சின் பைலட் தெரிவித்து இருந்தார். இவருக்கு பின்னணியில் பாஜக இருப்பதாக முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டி இருந்தார்.

Rajasthan Cabinet swearing-in ceremony will be held at 4:30 pm on July 16 at Raj Bhavan.

இதையடுத்து இன்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்த முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சினை பதவியில் இருந்து நீக்கியது குறித்த தகவல்களை அளித்தார். அதை ஆளுநர் கல்ராஜூம் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து பேட்டி அளித்து இருந்த முதல்வர் அசோக் கெலாட், ''சச்சின் பைலட் கையில் எதுவும் இல்லை. அவரை ஆட்டுவிப்பதே பாஜகதான். ஓட்டலில் அறைகளை ஏற்பாடு செய்து கொடுத்ததே பாஜகதான். அவர்கள் என்ஜாய் செய்கின்றனர். மத்தியப்பிரதேசத்தில் செயல்பட்ட அதே குழுதான் இங்கும் கைவரிசை காட்டியுள்ளது.

ஜெய்ப்பூரில் பின்னடைவு.. கடுமையான முடிவு எடுத்த சச்சின் பைலட்.. 2வது ரவுண்டுக்கு தயார்?ஜெய்ப்பூரில் பின்னடைவு.. கடுமையான முடிவு எடுத்த சச்சின் பைலட்.. 2வது ரவுண்டுக்கு தயார்?

கடந்த 6 மாதங்களாக இந்த சதி வேலை மாநிலத்தில் நடந்து வந்தது. தற்போது தலைமை இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நாட்டில் பாஜக குதிரை பேரத்தில் இறங்கியுள்ளது. இது ஜனநாயகத்துக்கு சிறந்தது இல்லை. 30 எம்.எல்.ஏ.க்களை கொண்டு கட்சி துவங்க முடியாது. இது கட்சி தாவல் சட்டத்தின் கீழ் குற்றமாகும்'' என்று தெரிவித்தார்.

ராஜஸ்தான் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து சச்சின் பைலட்டின் புகைப்படம், போஸ்டர் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. தன்னுடைய ட்விட்டர் தகவலிலும் சச்சின் மாற்றம் செய்துள்ளார்.

English summary
Rajasthan Cabinet swearing-in ceremony will be held at 4:30 pm on July 16 at Raj Bhavan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X