For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட்

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தான் மாநிலத்தின் சுரு நகரம்தான். இங்கு நேற்று 122 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் (50 டிகிரி செல்சியஸ்) பதிவானது.

Recommended Video

    Tamilnadu Heat temperature Update | 'Red Alert' For Several Parts ?

    நாடு முழுவதும் கோடைவெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. வட இந்திய மாநிலங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்திருந்தது.

    Rajasthan Churu sizzles at 50°C on Tuesday

    இந்த நிலையில் உலகிலேயே நேற்று மிக அதிகமான வெப்பநிலை பதிவான இடங்களில் ஒன்றாக ராஜஸ்தான் சுருவும் இடம்பெற்றுள்ளது. சுரு நகரில் நேற்று 122 டிகிரி ஃபாரன்ஹீட் (50 டிகிரி செல்சியஸ்) வெப்பம் பதிவாகி இருந்தது.

    சுரு நகரைப் பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருந்தது. மே 23-ந் தேதியன்று இங்கு 46.6 டிகிரி செல்சியஸ், மே 24-ல் 47.4 டிகிரி செல்சியஸ், மே 25-ல் 47.5 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் சுரு நகரில் பதிவாகி இருக்கும் மிக அதிகபட்சமான வெப்பம் இது. 2016-ம் ஆண்டு மே 19-ந் தேதியன்று சுரு நகரில் மிக அதிகபட்சமாக 50.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

    தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் இன்று கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் ! தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் இன்று கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் !

    சுரு நகரம் மட்டும் அல்லாமல் ராஜஸ்தானின் மேலும் 4 நகரங்களிலும் மிக அதிகமான வெப்ப நிலை பதிவாகி இருந்தது. பிகானீரில் 47.4 டிகிரி செல்சியஸும், ஶ்ரீகங்கா நகரில் 47 டிகிரி செல்சியஸும் கோட்டா, ஜெய்சால்மரில் 46 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகி இருந்தது.

    சுருநகரைப் போலவே உலகில் நேற்று அதிகமான வெப்பநிலை பதிவான இன்னொரு நகரம் ஜகோபாபாத். இது பாகிஸ்தானில் உள்ளது. ஐகோபாத்திலும் நேற்று 122 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருந்தது.

    English summary
    The mercury touching 50 degrees Celsius in Rajasthan's Churu district on Yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X