ராஜஸ்தானில் காங்கிரஸ் 91 தொகுதிகளை தாண்டாது! ஏபிபி நியூஸ் சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவு!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் 91 தொகுதிகளை தாண்டாது என ஏபிபி நியூஸ் சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதே வேளையில் பாஜகவை பொறுத்தவரை ராஜஸ்தானில் 114 தொகுதிகள் வரை வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அந்தக் கருத்துக் கணிப்பு முடிவில் கூறப்பட்டுள்ளன. இதன் மூலம் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுக்கும் என்பதும் பாஜக அரியணையில் அமரும் என்பதும் தெளிவாகிவிட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தவரை 53 மாவட்டங்கள், 5.26 கோடி வாக்காளர்கள் என பெரிய மாநிலமாகும். காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி, ஒவைசி கட்சி, என மொத்தம் 1875 வேட்பாளர்கள் நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டனர். தற்போதைய நிலவரப்படி ராஜஸ்தானில் 100 சீட்களை எந்தக் கட்சி பெறுகிறதோ அந்தக் கட்சி ஆட்சி அமைக்கலாம். ஏனெனில் கரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழந்ததால் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை.
இதனால் ஆட்சி அமைக்க பெரும்பான்மை 101 இடங்கள் தேவையில்லை. இதனிடையே Dainik Bhaskar நடத்திய ராஜஸ்தான் மாநில தேர்தல் Exit poll கருத்துக்கணிப்பு முடிவில் காங்கிரஸ் 85 தொகுதிகள் முதல் 95 தொகுதிகள் வரையும், பாஜக 98 தொகுதிகள் முதல் 105 தொகுதிகள் வரையும் வெற்றி பெறக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைவது உறுதியாகிறது.
ராஜஸ்தானில் பிரதமர் மோடி மேற்கொண்ட தீவிர பிரச்சாரமும், சுற்றுப்பயணமும் ஓரளவு தேர்தலில் கைக் கொடுத்திருக்கிறது. ராஜஸ்தானில் ஆட்சியை தக்க வைப்பதை விட்டுவிட்டு அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் கோஷ்டிக்காணம் பாடியதால் நிலைமை இப்போது பாரிதாபமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications
