For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் கடிதம் அனுப்புங்கள்.. சட்டசபையை அவசரமாக கூட்ட அனுமதிக்கிறேன்.. ராஜஸ்தான் ஆளுநர் 3 நிபந்தனை!

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் கடும் நெருக்கடியை தொடர்ந்து மாநில சட்டசபையை கூட்டுவதற்கான அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அம்மாநில அமைச்சரவை இது தொடர்பாக கடிதம் மூலம் மீண்டும் கோரிக்கை, வைக்க வேண்டும், அதில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த போகிறோம் என்று குறிப்பிட வேண்டும், என்று நிபந்தனை வித்தித்துள்ளார் . .

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உட்பட 19 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இந்த 19 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் நடவடிக்கை மேற்கொண்டார்.

ஆனால் சபாநாயகர் சிபி ஜோஷியின் நடவடிக்கைகளுக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த தடை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிபி ஜோஷி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய உள்ளார்.

அசோக் கெலாட் அரசுக்கு எதிராக 6 எம்எல்ஏக்களும் ஓட்டுப் போட வேண்டும்- பகுஜன் சமாஜ் அதிரடி விப் உத்தரவுஅசோக் கெலாட் அரசுக்கு எதிராக 6 எம்எல்ஏக்களும் ஓட்டுப் போட வேண்டும்- பகுஜன் சமாஜ் அதிரடி விப் உத்தரவு

ராஜ்பவன் போராட்டம்

ராஜ்பவன் போராட்டம்

இதனிடையே கொரோனா உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டும்; ஆகையால் சட்டசபையை கூட்ட வேண்டும் என்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை முதல்வர் கெலாட் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜ்பவனிலேயே போராட்டமும் நடத்தினர்.

ஆளுநர் பிடிவாதம்

ஆளுநர் பிடிவாதம்

ஆனாலும் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா அசைந்து கொடுப்பதாக இல்லை. இதனையடுத்து வரும் 31-ந் ச்தேதி சட்டசபையைக் கூட்ட வேண்டும் என்று ஆளுநருக்கு முதல்வர் கெலாட் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் கோப்புகளை அனுப்பியது. ஆனாலும் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவோ, இந்த கோரிக்கையை ஏற்காமல் அமைச்சரவை கோப்புகளை திருப்பி அனுப்பினார்.

கடுப்பான கெலாட்

கடுப்பான கெலாட்

இதனால் கடுப்பாகிப் போன முதல்வர் கெலாட், பிரதமர் மோடியிடம் முறையிட்டார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் முறையிட மனுவையும் தயார் செய்தார். அத்துடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், தேவையில்லாத அரசியல் சாசன நெருக்கடிகளை உருவாக்க வேண்டாம் என்றும் கல்ராஜ் மிஸ்ராவுக்கு கடிதம் அனுப்பினர். இதனால் ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வந்தது.

ஒப்புக்கொண்டார்

ஒப்புக்கொண்டார்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் கடும் நெருக்கடியை தொடர்ந்து மாநில சட்டசபையை கூட்டுவதற்கான அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அம்மாநில அமைச்சரவை இது தொடர்பாக கடிதம் மூலம் மீண்டும் கோரிக்கை, வைக்க வேண்டும், அதில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த போகிறோம் என்று குறிப்பிட வேண்டும், என்று நிபந்தனை வித்தித்துள்ளார்.

மூன்று நிபந்தனை

மூன்று நிபந்தனை

அதோடு சட்டசபையை கூட்டும் வகையில் மூன்று முக்கிய நிபந்தனைகளை அவர் விதித்து இருக்கிறார். முதல்வதாக, சட்டசபையை கூட்டுவது தொடர்பாக 21 நாள் நோட்டீஸ் பீரியட் அனுப்ப வேண்டும் என்றும் ஆளுநர் கூறியுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு என்றால் இந்த கால அவகாசத்தை குறைத்துக் கொள்ள வாய்ப்பு வழங்குவதாக ஆளுநர் கூறியுள்ளார். மேலும் சட்டசபை கூட்டத்தில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும், மேலும் கொரோனா பரவல் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.

English summary
Rajasthan Governor Kalraj Mishra ordered State Government to call for an Assembly Session.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X