For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திடீரென உயர்ந்த கிராப்.. அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. ராஜஸ்தானில் மீண்டும் 144 தடை உத்தரவு!

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: கொரோனா கேஸ்கள் அதிகரிப்பதை தொடர்ந்து ராஜஸ்தானில் நாளையில் இருந்து மீண்டும் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இரண்டாம் அலை தொடங்கி விட்டதோ என்று அச்சம் கொள்ளும் வகையில் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது.

Rajasthan imposes 144 after the surge in Coronavirus cases

டெல்லி, கேரளா, குஜராத், மேற்கு வங்க மாநிலங்களில் தினசரி கேஸ்கள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இன்று இரவில் இருந்து இரவு நேர (இரவு 9 to காலை 6) லாக் டவுன் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா கேஸ்கள் அதிகரிப்பதை தொடர்ந்து ராஜஸ்தானில் நாளையில் இருந்து மீண்டும் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. நாளையில் இருந்து மாநிலம் முழுக்க 144 தடை அமலில் இருக்கும் என்று ராஜஸ்தான் மாநிலத்தின் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது.

கைதுக்கு அஞ்சி பரப்புரை பயணம் நிற்காது... உதயநிதி பயணத்தை தொடர்வார்... துரைமுருகன் உறுதி..!கைதுக்கு அஞ்சி பரப்புரை பயணம் நிற்காது... உதயநிதி பயணத்தை தொடர்வார்... துரைமுருகன் உறுதி..!

இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகளை தவிர பிற கடைகள், நிறுவனங்கள் திறந்து இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் இதுவரை 2,34,907 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் .

20,168 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 2,12,623 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2,116 பேர் இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். ராஜஸ்தானில் தினசரி சராசரியாக 1500 கேஸ்கள் வந்த நிலையில் கடந்த சில நாட்களாக 2500+ கேஸ்கள் வருகிறது. இதையடுத்து தற்போது 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

English summary
Rajasthan imposes 144 after the surge in Coronavirus cases suddenly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X