For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வடிவேலு பாணியில் திருட முயன்றவரை... மண்ணில் போட்டு புரட்டி எடுத்த பொதுமக்கள்

Google Oneindia Tamil News

ஜுன்ஜுனூ: தவம் படத்தில், நகைச்சுவை நடிகர் வடிவேல் நடித்த செயின் பறிப்பு பாணியில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு, எசக்கு, பசக்காக மாட்டிக் கொண்டவரை பொதுமக்கள் புரட்டி எடுத்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் சாலையில் நடந்துச் சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்து, தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிய நபரை, பொதுமக்கள் சுற்றிவளைத்து தர்மஅடி கொடுத்தனர்.

Rajasthan: A man was beaten up by locals in Pilani area allegedly after he was caught snatching a womans chain

ஜுன்ஜுனூ மாவட்டத்தில் உள்ள பிலானி என்ற பகுதியில் பெண் ஒருவர் கழுத்தில் நகைகளுடன், சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வந்துள்ளார். அவரை பின் தொடர்ந்து வந்த மர்மநபர், திடீரென செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடியோட முயன்றார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் திருடனை துரத்திச் சென்று பிடித்தனர். பின்னர், சட்டையை கழற்றி விட்டு, கீழே போட்டு, மண்ணில் புரட்டி எடுத்தனர். அந்த வழியாக வந்தவர்கள் தங்கள் பங்கிற்கு, அடி, உதையை கொடுத்துவிட்டுச் சென்றனர்.

திருடன் கண்ணீர் விட்டு கதறவே, போலீசாரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர் பொதுமக்கள். இருப்பினும், திருடனிடம் சிக்கிய பெண், எந்த புகாரும் அளிக்கவில்லை. ஆனால், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக, வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு அருகே நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதே போல், சில வாரங்களுக்கு முன்பு, ராஜஸ்தான் மாநிலம் ராஜ்பவனில், பிரிட்டிஸ் ஆட்சியாளர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகளை மர்ம நபர்கள் அள்ளிச் சென்றனர். ராஜ்பவன் மாளிகை அருகே நட்சத்திர ஓட்டலில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து பார்த்ததில் 4 மர்ம நபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. 7 துப்பாக்கிகளை திருடிய, அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

English summary
Jhunjhunu: A man was beaten up by locals in Pilani area allegedly after he was caught snatching a woman's chain. Station House Officer Madan Kadavasra says, "the woman hasn't registered a case against him, but he was arrested by police for disrupting peace." #Rajasthan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X