For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜஸ்ட் மிஸ்... ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலில் பாஜக.,வை வீழ்த்திய காங்கிரஸ்

Google Oneindia Tamil News

ஜெய்பூர் : நடந்து முடிந்த ராஜஸ்தான் மாநில உள்ளாட்சி தேர்தலில் 1030 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 950 இடங்களை கைப்பற்றி உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டன. 20 மாவட்டங்களில் உள்ள 90 உள்ளாட்சி அமைப்புக்களுக்கு இந்த தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 3035 வார்டுகளில் 994க்கு இந்த தேர்தல் நடத்தப்பட்டது.இதில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது.

Rajasthan Municipal Election 2021: Congress wins 1,030 seats, BJP bags 950 seats

பிற்பகலில் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் 1030 இடங்களையும், பாஜக 950 இடங்களையும், சுயேட்சை வேட்பாளர்கள் 670 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். ஆளும் கட்சியான காங்கிரஸ் 398 வார்டுகளையும், பாஜக 333 வார்டுகளையும் கைப்பற்றி உள்ளன.

பிரதமரின் கண்ணியத்தை மதிக்கிறோம்... ஆனால் சுயமரியாதையை விட்டுதர மாட்டோம்... விவசாய சங்க தலைவர் பதில்பிரதமரின் கண்ணியத்தை மதிக்கிறோம்... ஆனால் சுயமரியாதையை விட்டுதர மாட்டோம்... விவசாய சங்க தலைவர் பதில்

அந்த தேர்தலில் 76.52 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன. உள்ளாட்சி தேர்தலில் பெற்றுள்ள இந்த வெற்றி ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என நம்பப்படுகிறது. ஆளும் கட்சி மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை இது காட்டுகிறது எனக்கூறும் அக்கட்சியினர் இதனை பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

English summary
Rajasthan Municipal Election 2021: Congress wins 1,030 seats, BJP bags 950 seats
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X