For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக வெற்றி கொடி நாட்டியது- காங்.-க்கு பின்னடைவு!

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநில உள்ளாட்சி தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியது. இது ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

அண்மையில் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு விஸ்வரூபம் எடுத்த பாஜக 2-வது இடத்துக்கு வந்தது.

கேரளா உள்ளாட்சி தேர்தல்

கேரளா உள்ளாட்சி தேர்தல்

இதனைத் தொடர்ந்து தற்போது கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் கடந்த காலங்களை விட பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றும் என தெரிகிறது. வழக்கத்துக்கு மாறாக 600க்கும் மேற்பட்ட சிறுபான்மையினரை பாஜக வேட்பாளர்களாக கேரளாவில் நிறுத்தியிருக்கிறது.

ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல்

ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல்

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநில உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இம்மாநிலத்தில் நவம்பர் 23, நவ.27, டிசம்பர் 1, டிச.5 என 4 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

பாஜக அதிக இடங்கள்

பாஜக அதிக இடங்கள்

ராஜஸ்தானில் 4,371 பஞ்சாயத்து சமிதி, 636 ஜில்லா சமிதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. பஞ்சாயத்து சமிதிகளில் பாஜக 1,812 இடங்களிலும் காங்கிரஸ் 1,713 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. சுயேட்சைகள் 413 இடங்களில் வென்றுள்ளனர்.

கட்சிகள் பெற்ற இடங்கள்

கட்சிகள் பெற்ற இடங்கள்

லோக்சபா எம்.பி. ஹனுமான் பேனிவாலின் ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி 56 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16, பகுஜன் சமாஜ் கட்சி 3, தேசியவாத கட்சி 1 இடத்திலும் வென்றுள்ளன.

English summary
In Rajasthan Panchayat Samiti Elections, BJP won 1,833 seats, Congress got 1713 seats only.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X