For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜஸ்தானில் மீண்டும் கும்பல் வன்முறை.. அடித்தே கொல்லப்பட்ட போலீஸ்காரர்

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மீண்டும் கும்பல் வன்முறை தலை தூக்கி உள்ளது. அங்கு தலைமை காவலர் ஒருவர் ஒரு கும்பலால் அடித்தே கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ரஸ்மன்ந்த மாவட்டம் குன்வாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் கனி வயது 48. இவர் அங்குள்ள ஒரு காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.

 Rajasthan Police Head constable dies after Beaten By Mob

நிலத்தகராறு தொடர்பாக சிலரிடம் அவர் விசாரித்து கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஒரு கும்பல் தலைமைக் காவலர் அப்துல் கனியை தாக்க தொடங்கியது. மிக கொடூரமாக அந்த கும்பல் காவலர் அப்துல் கனியை அடித்து உதைத்ததில் அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்தவிட்டதாக அறிவித்தனர்.

இதையடுத்து சம்பவம் குறித்து அறிந்த உயர்அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வன்முறை கும்பல் விரைவில் கைது செய்யப்படுவார்கள் உயர் காவல் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ஓனர் ராஜகோபால் கவலைக்கிடம்.. மருத்துவர்கள் தகவல் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ஓனர் ராஜகோபால் கவலைக்கிடம்.. மருத்துவர்கள் தகவல்

ராஜஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக வன்முறை கும்பல் தாக்குதல் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ரக்பர் கான் வயது 28. இவர் பசுக்களை கடத்தி செல்வதாக கூறி கொடூரமாக தாக்கியது. இதையடுத்து போலீசார் தங்கள் கஸ்டடியில் கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார். இதேபோல் கடந்த 2017ம் ஆண்டு மாடுகளை ஜெய்பூரில் இருந்து ஹரியானா கொண்டு சென்ற பெக்லு கான் என்பவர் மாடுகளை கடத்தி செல்வதாக இடைமறித்து தாக்கி பசு பாதுகாப்பு கும்பல் படுகொலை செய்திருந்தது.

இப்போது மூன்றாவது போலீஸ்கார் அப்துல் கனி நிலத்தகராறை விசாரிக்கும் போது கும்பலலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

English summary
Rajasthan Police Head constable Abdul Gani 48 dies after Beaten By Mob when he probing a land dispute at Rajsamand
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X