For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜஸ்தான் அரசியல் குழப்பம்.. மௌனம் கலைத்த முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே.. முதல்முறையாக கருத்து!

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில் அது குறித்து முதல்முறையாக முன்னாள் பாஜக முதல்வர் வசுந்தரா ராஜே கருத்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அதேபோல் அங்கு சச்சின் பைலட் ஆதரவு அமைச்சர்கள் 2 பேர் நீக்கப்பட்டு புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராக திரும்பியதால் காங்கிரஸ் தலைமை இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.

Rajasthan Political Crisis: Vasundhara Raje talks for the first time

அங்கு எப்போது ஆட்சி கவிழும் அல்லது சச்சின் பைலட் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது .

இந்த நிலையில் அங்கு காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு ஆதரவாக செயல்பட்டதாக முன்னாள் பாஜக முதல்வர் வசுந்தரா ராஜா மீது புகார் வைக்கப்பட்டது. பாஜகவின் கூட்டணியில் இருக்கும் ராஷ்டிரிய லோக்தன்டிரிக் கட்சியை சேர்ந்த ஹனுமான் பெனிவால் இந்த புகாரை வைத்து இருந்தார். சச்சின் பைலட் வளர்ந்தால் அது தனக்கு சிக்கலாக முடியும்.

பிடிபி எம்எல்ஏக்கள் 2 பேர் திடீரென ஆதரவு.. ஆளுநரை சந்தித்த அசோக் கெலாட்.. ராஜஸ்தானில் திருப்பம்!பிடிபி எம்எல்ஏக்கள் 2 பேர் திடீரென ஆதரவு.. ஆளுநரை சந்தித்த அசோக் கெலாட்.. ராஜஸ்தானில் திருப்பம்!

அதனால் தற்போது அசோக் கெலாட்டிற்கு ஆதரவாக தற்போது வசுந்தரா ராஜே செயல்படுகிறார் என்று அவர் மீது புகார் வைக்கப்பட்டது. இந்த நிலையில் முதல்முறையாக ராஜஸ்தான் அரசியல் பிரச்சனை குறித்து வசுந்தரா ராஜே கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியில் நடக்கும் மோதல் காரணமாக மக்கள் தேவையில்லாத விலை கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ராஜஸஸ்தானில் கொரோனா காரணமாக 500+ பேர் பலியாகி உள்ளனர். 28000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது அரசியல் மோதல் தேவையா?

வெட்டுக்கிளி தாக்குதல் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மின்சார தட்டுப்பாடு அதிகமாகியுள்ளது. இந்த நேரத்தில் இப்படி அரசியல் மோதலில் ஈடுபடுவது தவறு.

இதில் பாஜக கட்சியையும், பாஜக தலைவர்களையும் உள்ளே இழுப்பது மிகவும் தவறு . காங்கிரசின் அரசியல் சேற்றில் எங்களை சேர்க்க வேண்டாம், என்று வசுந்தரா ராஜே கருத்து தெரிவித்துள்ளார்.

English summary
Rajasthan Political Crisis: Vasundhara Raje talks for the first time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X