For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2014 தேர்தலிலும் 73 தான்.. அட 2018லும் அதேதானாம்.. ராஜஸ்தானில் ஒரு ஷாக் மார்க்கண்டேயர்!

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஒருவருக்கு 2014-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை ஒரு நாள் கூட வயது கூடாதது எப்படி என்ற யோசனையில் உள்ளனர் மக்கள்.

ராஜஸ்தான், தெலுங்கானா, மிஸோரம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்த மாநிலங்களில் ஆளும் கட்சி ஆட்சியை தக்க வைக்கவும் எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வரவும் ஜரூராக தேர்தல் பிரசாரங்களில் இறங்கியுள்ளனர்.

பாஜக, காங்கிரஸ் என மாறி மாறி பிரசாரங்களை கையில் எடுத்துள்ளன. தேர்தல் என்றாலே ஏதாவது ஒரு கூத்து நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

[தேர்தல் வெற்றிக்காக தர லோக்கலுக்கு இறங்கும் அரசியல்வாதிகள்.. பரபரக்கும் 5 மாநில தேர்தல்கள் ]

வாய்ப்பு

ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பார்மர் தொகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மேவாராம் ஜெயின் பாஜகவின் பிரியங்கா சவுத்ரியை 6000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக் கண்டார். இதனால் இந்த முறை வேறு ஒருவருக்கு வாய்ப்பு வழங்க பாஜக முடிவு செய்தது.

வயது 73

வயது 73

அதன்படி கடந்த 2008- 2013 ஆம் ஆண்டு வரை பேட்டூ தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த சோனா ராம் சவுத்ரிக்கு வாய்ப்பு வழங்கியது. இவர் அண்மையில் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் தனது வயதை 73 என குறிப்பிட்டுள்ளார்.

5 ஆண்டுகளில் 7 வயதா அதிகம்

5 ஆண்டுகளில் 7 வயதா அதிகம்

2008-ஆம் ஆண்டு இவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் 65 என தனது வயதை குறிப்பிட்டிருந்த சவுத்ரி 2013-ஆம் ஆண்டு பேட்டூ தொகுதியில் போட்டியிட்டார் (தோல்வி). அப்போது அவரது வயதை 72 என குறிப்பிட்டுள்ளார். அப்படியென்றால் 5 ஆண்டுகளுக்குள் இவருக்கு 7 வயது எப்படி கூடியிருக்கும். அது போல் கந்ட த 2014 -ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சோனா ராம் அப்போதைய வேட்புமனுவில் தனது வயதை 72 என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தலில் மேவார் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாய்ப்பு

வாய்ப்பு

அந்த வேட்புமனுவில் தனது வயதை 72 என்றே குறிப்பிட்டிருக்கிறார். அப்படியென்றால் கடந்த நான்கரை ஆண்டுகளாக சோனா ராமின் வயது ஒரு நாள் கூட கூடவே இல்லையா என்பதே கேள்வி. இது போல் வயதை குறைத்து போடுவதற்கும் ஒரு காரணம் உண்டு.

கிண்டல்

கிண்டல்

பாஜகவில் வயதானவர்களை ஓரம்கட்டும் கலாசாரம் இருந்து வருகிறது. இதனால் தாமும் ஓரங்கட்டப்பட்டு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்துவிட்டால் என்ன செய்வது என்பதற்காகவே இதுபோன்ற தில்லு முல்லு வேலைகளை நடத்தி வருகிறார்கள் என தெரிகிறது. வயது ஏறாமல் இருப்பதற்காக டிப்ஸ் கேட்டு பிரபல அழகு சாதன பொருட்களின் நிர்வாகிகள் வீட்டு வாசலில் கியூ கட்டி நிற்க போகிறார்கள் பாத்து சார் என நெட்டிசன்கள் கிண்டல் செய்கின்றனர்.

English summary
Colonel Sona Ram Choudhary, the BJP's MP from Barmer, is contesting from Barmer Assembly constituency this time and in his nomination paper submitted on November 19, Choudhary has mentioned his age to be 73. The striking fact is that ahead of the Lok Sabha election in 2014, too, Choudhary had mentioned his age to be 73! The MP hasn't aged a day in the last four and half years, it seems.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X