For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜஸ்தான் நகர்புற தேர்தலில் சற்றே சறுக்கிய பாஜக - காங்கிரஸ் 619 வார்டுகளில் வெற்றி

ராஜஸ்தானில் நடைபெற்ற பஞ்சாயத்து ராஜ் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் (ULB) தேர்தலில் 619 வார்டுகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களில் உள்ள 50 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட 1,775 வார்டுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட முடிவுகளில், பாஜகவின் 548 உடன் ஒப்பிடும்போது, காங்கிரஸ் 619 வார்டுகளை வென்றது. பாஜகவை பின்னுக்கு தள்ளி உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது காங்கிரஸ் கட்சி. சுயேச்சைக்கு அடுத்த இடத்தில் பாஜக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது பாஜக தொண்டர்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதல்வராக சச்சின் பைலட் இருந்தார். ஆனால் உட்கட்சி பூசல் காரணமாக சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தினார். அதன்பிறகு பல்வேறு சர்ச்சைகளை அடுத்து சமரசம் ஏற்பட்டது.

Rajasthan urban polls Congress win 619 wards

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. 222 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு நடந்த தேர்தலில் பாஜக 1,835 வார்டுகளிலும், காங்கிரஸ் 1,718 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. இது ஆளுங்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.

இந்த சூழலில் நகர்ப்புறங்களில் நடந்த தேர்தல்களின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. 50 நகராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 12 மாவட்டங்களின் 1,775 வார்டுகளில் 619 வார்டுகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
சுயேட்சைகள் 595 வார்டுகளிலும், பாஜக 549 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இது பாஜகவிற்கு சற்றே அதிர்ச்சியளிக்கும் விதமாகவே அமைந்துள்ளது. பகுஜன் சமாஜ்வாதி கட்சி 7, சிபிஎம் மற்றும் சிபிஐ தலா இரண்டு வார்டுகள், ராஷ்டிரிய லோக் தந்திரிக் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருக்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் டோட்டாஸ்ரா, நகர்ப்புற வாக்காளர்களிடமிருந்து பாஜக விலகி வருவதாகவும், தனிப்பட்ட வாக்குகளுக்குப் பின்னால் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் முடிவுகள் குறிப்பிடுவதாக தெரிவித்தார். வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் முதல்வர் அசோக் கெலாட். தோல்வி குறித்து பாஜக தலைவர்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக வெற்றி கொடி நாட்டியது- காங்.-க்கு பின்னடைவு! ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக வெற்றி கொடி நாட்டியது- காங்.-க்கு பின்னடைவு!

ராஜஸ்தானில் நடைபெற்ற நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது ஒருபக்கம் இருக்க பிரதான எதிர்கட்சியான பாஜக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு ஆட்சியை பிடித்த பாஜக தென்மாநிலமான தெலுங்கானாவிலும் தனது இருப்பை உறுதி செய்தது. இதனை கடந்த மாதம் நிறைவடைந்த ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் மூலம் அறிய முடிந்தது. மேற்கு மேற்கு வங்க மாநிலத்திலும் தனது பலத்தை சென்ற நாடாளுமன்ற தேர்தல் மூலம் வெளிக்காட்டியது. இப்போது ராஜாஸ்தானில் பாஜக சற்றே சறுக்கலை சந்தித்துள்ளது பாஜக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
In the results announced on Sunday for 1,775 wards under 50 urban local bodies in 12 districts in Rajasthan, the Congress won 619 wards, compared to the BJP's 548. The Congress party has overtaken the BJP and raised the banner of victory in local bodies. The BJP’s push to third place next to the Independent has come as a shock to BJP volunteers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X