For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ராஜேஷ் கோபிநாதன் நியமனம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ராஜேஷ் கோபிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பையில் டாடா குழுமத்தின் நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டாடா நிறுவனதலைவர் ரத்தன் டாடா உட்பட 5 பேர் கொண்ட குழு டாடா சன்ஸ் தலைவராக நடராஜன் சந்திரசேகரன் நியமிக்கப்படுவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ராஜேஷ் கோபிநாதன் நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Rajesh Gopinathan appointed TCS CEO

இதைத்தொடர்ந்து டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ராஜேஷ் கோபிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். 1971ம் ஆண்டு பிறந்த இவர், திருச்சி மண்டல பொறியியல் கல்லூரியில் (தற்போது என்ஐடி) எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்கும், ஐஐஎம் ஆமதாபாதில் நிர்வாகப்படிப்பு முடித்தார்.

ராஜேஷ் கோபிநாதன், டிசிஎஸ் நிறுவனத்தில் 2001ம் ஆண்டு சேர்ந்தார். 2013 பிப்ரவரியில் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் பிபிஓ பிஸினஸ், இந்தியா பிஸினஸ் பகுதி மற்றும் வங்கி சாப்ட்வேர் ஆகிய பிரிவுகளைக் கவனித்து வந்தார். சிஎப்ஓ-வாக நியமிக்கப்படுவதற்கு முன்பு பிஸினஸ் பைனான்ஸ் பிரிவின் துணைத்தலைவராக இருந்தார்.

English summary
india's largest software services firm Tata Consultancy Services today said Rajesh Gopinathan would take over as Chief Executive Officer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X