For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிஆர்பிஎப்பின் புதிய டிஜிபி ராஜிவ் ராய் பட்நாகர்..நக்சல்களுக்கு பதிலடி கொடுக்க மத்திய அரசு தீவிரம்

சிஆர்பிஎப் படையின் புதிய தலைவராக ராஜிவ் ராய் பட்நாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

By Devarajan
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய ரிசர்வ் படையின் புதிய தலைவராக ராஜிவ் ராய் பட்நாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை இன்று மாலை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

சிஆர்பிஎப் படையின் தலைவர் பதவி கடந்த 2 மாதங்களாக காலியாக இருந்துள்ளது.முன்னதாக அந்தப்பதவியில், கோடே துர்கா பிரசாத் இருந்துள்ளார்.அவர் ஓய்வுபெற்ற பிறகு அந்தப் பணியிடம் நிரப்பப் படாமல் இருந்துள்ளது.

Rajiv Rai Bhatnagar is new CRPF chief

இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநில சுக்மா மாவட்டத்தில் நக்சல் தாக்குதல் நடந்தது. அதில் 26 சிஆர்பிஎப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.இதனால் அரசுமீது விமர்சனம் எழுந்தது.

தற்போது சிஆர்பிஎப் படைக்கு புதிய தலைவராக ராஜிவ் ராய் பட்நாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.பட்நாகர்,உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்.1983ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியாவார்.

இதற்கு முன்னதாக பட்நாகர்,மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவில் ஏடிஜிபியாக பணியாற்றினார்.அங்கிருந்து அவர் இப்போது சிஆர்பிஎப் படையின் தலைவராக புரமோஷனில் வந்துள்ளார்.

English summary
Rajiv Rai Bhatnagar is the new chief of the CRPF.Following the Chhattisgarh attack the government had been criticised for not filling up the post. It was said that in the absence of a DG CRPF, key policy decisions could not be taken as a result of which planning suffered.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X