For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்தில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதற்கு ராஜ்நாத் சிங் கண்டனம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: குஜராத்தில் நான்கு தலித் இளைஞர்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்ராத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஏற்கெனவே இறந்த பசுமாட்டின் தோலை உரித்த தலித்துகள் மீது கும்பல் ஒன்று சரமாரியாகத் தாக்கியது. மோட்டா சமதியாரா என்ற கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

Rajnath singh condemns Una incident

இந்த பயங்கர தாக்குதலை கண்டித்து குஜராத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இது தொடர்பாக பாராளுமன்றத்திலும் புயலை கிளப்பியது.

அப்போது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் கூறுகையில், குஜராத்தில் தலித் இளைஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் இனியும் தொடரக்கூடாது. மக்களின் நம்பிக்கையை பெற அனைத்து அரசியல்வாதிகளும் முயலவேண்டும். சுதந்திரத்திற்கு பிறகு அரசியல், அரசியல்வாதிகள் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

English summary
union Home Minister Rajnath Singh on Wednesday condemned the Una incident in Gujarat
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X