For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெகிழ்ச்சி.. ராணுவ வீரர் உடலை தோளில் சுமந்து சென்ற ராஜ்நாத்சிங்

Google Oneindia Tamil News

Recommended Video

    ராணுவ வீரர் உடலை தோளில் சுமந்து சென்ற ராஜ்நாத்சிங் | Oneindia Tamil

    ஸ்ரீநகர்: தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள், உடல்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    ஜம்மு காஷ்மீரில், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினர், சிஆர்பிஎஃப் வீரர்கள் பயணித்த பஸ் மீது நேற்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகினர்.

    Rajnath Singh lend a shoulder to mortal remains of a CRPF soldier

    இவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு பத்கம் என்ற பகுதியில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெட்டிகளில் வைக்கப்பட்டது. இன்று மதியம் அங்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக், ராணுவத்தின் வடக்கு கமாண்டர் லெப்டினண்ட் ஜெனரல் ரன்பீர் சிங் ஆகியோர் ராணுவ வீரர்கள் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    இதன் பிறகு ராணுவ வீரர்களின் உடல் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைப்பதற்காக, வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது, ராணுவ வீரர் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டி ஒன்றை தனது தோள்மீது தூக்கி வைத்தபடி, ராணுவத்தினருடன் வாகனம் வரை நடந்து சென்றார் ராஜ்நாத் சிங். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ராணுவ வீரரின் உடலை தூக்கி சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    English summary
    Union Ministers Rajnath Singh and J&K DGP Dilbagh Singh lend a shoulder to mortal remains of a CRPF soldier.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X