For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியை ஆதரிச்சா பாஜகவில் சேருங்க... ராஜ் தாக்கரே மீது ராஜ்நாத்சிங் காட்டம்!

By Mathi
|

மும்பை: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரிப்பதாக ஒருந்தால் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா, பாரதிய ஜனதாவுடன் இணைந்துவிட வேண்டும் அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

Rajnath slams Raj Thackeray

மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே, நரேந்திர மோடியை தொடர்ந்து ஆதரித்து பேசி வருகிறார். ஆனால் இதை பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா விரும்பவில்லை.

இதனால் கடுப்பாகிப் போன ராஜ்நாத்சிங், சில கட்சிகள் மோடி பெயரை பயன்படுத்திக் கொண்டு ஆதாயம் தேட முயற்சிக்கின்றன. யார் அவர்களது ஆதரவைக் கேட்டது.. அப்படி மோடிக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் ஒன்று பாரதிய ஜனதாவில் இணைய வேண்டும் அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் பெற வேண்டும். அதைவிட்டுவிட்டு குழப்பம் ஏற்படுத்திக் கொண்டிருக்க கூடாது என்றார்.

ஆனால் ராஜ்தாக்கரேவோ, பாஜகவில் ஐக்கியமாவது பற்றியோ தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது குறித்தோ எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

English summary
National President of the Bharatiya Janata Party (BJP) -- Rajnath Singh hit out at Raj Thackeray saying that the chief of Maharashtra Navnirman Sena (MNS) is trying to cash on Narendra Modi's name.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X