For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜ்யசபா தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: மாநிலங்களவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிய உள்ளது. இந்நிலையில் வரும் ஜூன் மாதம் 11ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

BJP

இந்த தேர்தலில் தமிழகத்தில் காலியாகும் 6 இடங்களில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளர் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

12 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதன்படி ராஜஸ்தானில் இருந்து பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, ஓம் பிரகாஷ் மாதுர்,ஹர்ஷ்வர்த்தன் சிங் மற்றும் ராம்குமார் வர்மா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

மேலும் ஹரியானாவில் இருந்து சவுத்ரி பிரேந்தர் சிங்கும், மகாராஷ்டிராவில் இருந்து பியூஷ் கோயலும், கர்நாடகாவில் இருந்து நிர்மலா சீதாராமனும், ஜார்க்கண்டில் இருந்து முக்தார் அப்பாஸ் நக்வியும், குஜராத்தில் இருந்து புருஷோத்தன் ரூபலாவும், மத்திய பிரதேசத்தில் இருந்து அனில் மாதவ் தாவேவும், சத்தீஸ்கரில் இருந்து ராம்விசார் நீதமும், பீகாரில் இருந்து கோபால் நாராயண் சிங்கும் போட்டியிடுகிறார்கள்.

இதில் வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், சவுத்ரி பிரேந்தர் சிங் மற்றும் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் மத்திய அமைச்சர்கள் ஆவர்.

English summary
BJP has released the list of 12 candidates for the upcoming Rajya Sabha election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X