For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை நடைபெறுகிறது ராஜ்யசபா எம்.பி. தேர்தல்.. பலத்தை அதிகரிக்க பாஜக மும்முரம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது.

உத்தரபிரதேசம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 16 மாநிலங்களில் 58 ராஜ்யசபா உறுப்பினர் பதவியிடங்கள் காலியாகியுள்ளன. ராஜ்யசபா உறுப்பினர்களை சட்டசபை உறுப்பினர்கள், வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள்.

Rajyasabha Election Notification Date- Feb 23, 2018.

நாளை, காலை 9 மணிக்கு துவங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடையும். ரிசல்ட் மாலையிலேயே அறிவிக்கப்படும். எம்.பி பதவியிடங்கள் காலியாக உள்ள 16 மாநிலங்களில் 11ல் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே, ராஜ்யசபாவில் அக்கட்சிக்கு கூடுதல் இடம் கிடைக்கப்போகிறது.

இப்போது 245 பேர் கொண்ட ராஜ்யசபாவில் பாஜகவுக்கு 58 எம்.பி.க்கள் உள்ளனர். காங்கிரசை விட நான்கு எம்.பி.க்கள் மட்டுமே பாஜகவுக்கு அதிகமாக உள்ளனர். தனி மெஜாரிட்டிக்கு 126 எம்.பி.க்கள் தேவை. ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக்காலம் 6 வருடங்கள். எனவே இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை மூன்றில் ஒரு பங்கு எம்.பி.க்கள் ஓய்வு பெறுகிறார்கள்.

மாநிலம் மொத்த சீட்டுகள் போட்டியின்றி தேர்வு (மார்ச் 15ல்) மார்ச் 23ல் தேர்தல் நடைபெறப்போவது
1 ஆந்திரா 3 6
2 பீகார் 6 3
3 சட்டீஸ்கர் 1 1
4 குஜராத் 4 4
5 ஹரியானா 1 1
6 ஹிமாச்சல் 1 1
7 கர்நாடகா 4 4
8 மத்திய பிரதேசம் 5 5
9 மகாராஷ்டிரா 6 6
10 தெலுங்கானா 3 3
11 உத்தரபிரதேசம் 10 10
12 உத்தரகாண்ட் 1 1
13 மேற்கு வங்கம் 5 5
14 ஒடிசா 3 3 0
15 ராஜஸ்தான்
3
3 0
16 ஜார்கண்ட் 2 2
மொத்தம் 58 33 25

உத்தரபிரதேசத்தில் 10, மகாராஷ்டிரா, பீகாரில் தலா 6, மேற்கு வங்கம், மத்திய பிரதேசத்தில் தலா 5, குஜராத், கர்நாடகாவில் தலா 4, ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஒடிசாவில் தலா 3, சட்டீஸ்கர், ஹரியானா, உத்தரகாண்ட் , ஹிமாச்சல பிரதேசம் தலா 1 பதவியிடங்கள் காலியாக உள்ளன.

எனவே, 58 பேரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில், 10 மாநிலங்களில் 33 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். நாளை அது முறைப்படி அறிவிக்கப்படும். எஞ்சிய 25 பதவிகளுக்குத்தான், 6 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அவை, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, ஜார்கண்ட், சட்டீஸ்கர் மற்றும் தெலுங்கானா.

கட்சி போட்டியின்றி தேர்வு
பாஜக 16
காங்கிரஸ் 5
பிஜுஜனதாதளம் 3
தெலுங்கு தேசம் 2
ஒய்எஸ்ஆர்காங்கிரஸ் 1
ஐக்கிய ஜனதாதளம் 2
ராஷ்டிரிய ஜனதாதளம் 2
சிவசேனா 1
தேசியவாத காங்கிரஸ் 1

உத்தரபிரதேசத்தில் இருந்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி போட்டியிடுகிறார். ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், ராஜ்யசபா தேர்தல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

English summary
The elections for 58 crucial seats in Rajya Sabha will be held on March 23. The elections are being held to fill the vacancies arising out of the retirement of 58 members of the upper house next month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X