For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யூரி தாக்குதல்: இவர் சொல்லும் அட்வைஸை கண்டிப்பா கேளுங்க மக்களே!

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: யூரி தாக்குதல் விவகாரம் தொடர்பாக அரசு எடுக்கும் முடிவை ஆதரப்பது தான் சரியான முடிவு என பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

Rakeysh Omprakash Mehra's advice after Uri attack is a must WATCH

கடந்த 18ம் தேதி அதிகாலை ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரியில் உள்ள ராணுவ நிர்வாகத் தலைமையகத்திற்குள் புகுந்து 4 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 18 பேர் வீர மரணம் அடைந்தனர்.

தூங்கிக் கொண்டிருந்த ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் கோழைத்தனமாக தாக்குதல் நடத்தினர். இது குறித்து அறிந்த இந்திய மக்கள் கோபம் அடைந்தனர். சமூக வலைதளங்களில் பாகிஸ்தானை திட்டித் தீர்த்தனர்.

இந்நிலையில் பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது,

இது பற்றி நாம் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. இது பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் மட்டும் அல்ல இது ஒரு முக்கியமான பிரச்சனை. இது பற்றி பேசி தேவையில்லாமல் போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்த வேண்டாம்.

நம் பிரதமர் மற்றும் ஆட்சியில் உள்ளவர்கள் அமைதி பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நினைக்கும் அவர்களின் முயற்சி வெற்றி பெறும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood director Rakeysh Omprakash Mehra has advised the people of India to kee quit about Uri attack and to support the government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X