For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க நைட் கிளப் தாக்குதல்.. மதத்தை முன்வைத்து ராம்கோபால் வர்மா சர்ச்சை கருத்து

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: அமெரிக்காவில் இரவு விடுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து மத ரீதியிலான சர்ச்சை கருத்துக்களை தெரிவித்துள்ளார் திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா.

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் ஆர்லண்டோ நகரில் ‘பல்ஸ்' என்ற பெயரில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் ஆப்கன் வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க குடிமகன் உமர் மேதீன் என்பவன் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாதுகாப்பு படையினரால் அவனும் கொல்லப்பட்டான். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுள்ளது.

இதுகுறித்து ராம் கோபால் வர்மா டிவிட்டரில், இன்று, வரிசையாக கூறிய சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அதில் ஏசுநாதரையும், அல்லாவையும் குறிப்பிட்டு வெளியிட்ட ஒரு கீச்சு விமர்சனத்தை பெற்றுத் தந்துள்ளது.

பிரார்த்தனை எதற்கு

"துப்பாக்கி சூட்டில் இறந்துபோனவர்களுக்காக பிராத்தனை நடத்தப்படவது நகைச்சுவையாக உள்ளது. அதே கடவுள்தான் அவர்களை சாவில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. ஐஎஸ்ஐஎஸ் கடவுளைவிட பலியானவர்கள் வணங்கிய கடவுள் சக்தி குறைந்தவர்."

கடவுளால் முடியவில்லை

"ஏசு நாதராலும், பராக் ஒபாமாவாலும் அடக்க முடியாத தீவிரவாதிகளை, டொனால்ட் ட்ரம்ப்தான் அடக்க முடியும்."

டொனால்ட் ட்ரம்ப் ஆதரவு

"நைட் கிளப் தாக்குதலுக்கு பிறகும், டொனால்ட் ட்ரம்புக்கு அமெரிக்கர்கள் ஒட்டுமொத்தமாக ஆதரவு தரவில்லை என்றால், அல்லா மட்டுமே அவர்களை காப்பாற்ற முடியும்."

உலகின் நம்பிக்கை

"நான், டொனால்ட் ட்ரம்ப் வெறுக்கும் ஒரு சமூகத்தை சேர்ந்தவன்தான் என்றபோதிலும், அமெரிக்கா மற்றும் இன்றி, உலகுக்கும் ஒரே நம்பிக்கை டொனால்ட் ட்ரம்ப்தான்."

English summary
Cinema director Ram Gopal Varma's tweets on USA night club attack become controversial.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X