For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரிக்கெட் பைத்தியம் ஒழியும்வரை இந்திய அணி தோற்றுக் கொண்டே இருக்க வேண்டும்!- ராம் கோபால் வர்மா

By Shankar
Google Oneindia Tamil News

உலகக் கோப்பை அரை இறுதியில் இந்திய அணி தோற்று விட்ட சோகத்திலிருந்து மெல்ல ரசிகர்கள் மீண்டு வரும் சூழலில், அவர்களை வெறுப்பேற்றுவது மாதிரி ட்விட்டரில் எழுதியுள்ளார் சர்ச்சைக்குரிய இயக்குநர் ராம் கோபால் வர்மா.

என் நாட்டு ரசிகர்கள் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தும் வரை, இந்திய அணியை மற்ற அணிகள் தோற்கடித்துக் கொண்டே இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் நேற்று ட்வீட் செய்துள்ளார்.

Ram Gopal Varma tweets: I am sooooo happyyy India lost

அவர் மேலும் குறிப்பிடுகையில், ""நாட்டு மக்களின் கிரிக்கெட் என்ற மோசமான வியாதியை குணப்படுத்துமாறு, என் நாட்டில் உள்ள எல்லா கடவுள்களையும் வேண்டிக் கொள்கிறேன்.

நான் கிரிக்கெட்டை வெறுக்கிறேன். ஏனென்றால் அது நாட்டிலுள்ள ஆண்களை வேலை செய்வதை நிறுத்திவிட்டு டிவி பார்க்க வைத்து விடுகிறது.

இந்தியா தோற்றதில் மகிழ்ச்சி. நான் கிரிக்கெட்டை வெறுக்கிறேன். அதைவிட அதிகமாக கிரிக்கெட்டை நேசிப்பவர்களை வெறுக்கிறேன்...

- இப்படி போகிறது அவரது ட்வீட்கள்.

இவரது ட்வீட்களை பலரும் கடுமையாகத் திட்டியுள்ளனர். ராம் கோபால் வர்மா பப்ளிசிட்டிக்காக இப்படிச் செய்வதாகவும், அவர் ஒரு சைக்கோ என்றும் பலர் திட்டியுள்ளனர்.

'ராம் கோபால் வர்மா படங்கள் தொடர்ந்து படு தோல்வியைச் சந்திப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி' என்று ஒருவர் பதிலுக்கு ட்வீட்டியுள்ளார்.

'உனக்கு என்னதான்யா ஆச்சு... கிரிக்கெட்டை வெறுக்கிற நீ என்ன ***-க்கு சிகரெட் பிடிக்கிற?' என்று ஒரு பெண் திட்டியுள்ளார்.

இன்னொருவர், 'உன்னுடைய படங்கள்தான் இந்த நாட்டுக்கே வியாதி.. தொடர்ந்து தோற்றுக் கொண்டே இரு' என்று ட்வீட்டியுள்ளார்.

சிலர் அவர் ட்வீட்களுக்கு வரவேற்பும் தந்துள்ளனர். அவர்களின் எண்ணிக்கை ரொம்ப ரொம்ப குறைவே.

English summary
Hot on the heels on India's embarrassing World Cup 2015 semifinals loss to Australia on Thursday, the controversial Hindi filmmaker rolled out one distasteful tweet after another. On a tweeting spree, Varma talked about everything from how he hates cricket to how he's happy the Men in Blue lost out on the world cup.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X