For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லாக்டவுனுக்கு இடையே பாபர் மசூதியை இடித்து வைத்த ராமர் சிலையை புது கோவில் இடத்தில் வைத்து இன்று பூஜை

Google Oneindia Tamil News

அயோத்தி: அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து வைத்த ராமர் சிலையை 27 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த இடத்தில் இருந்து எடுத்து புதிய கோவில் கட்டும் இடத்தில் பிரதிஷ்டை செய்து பூஜை நடத்தப்பட்டது. இதில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.

கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ந் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Ram Idol shifted out of makeshift temple in Ayodhya

இந்த 21 நாட்களும் அனைவரும் வீடுகளில்தான் இருக்க வேண்டும்; வீட்டை விட்டு வெளியே வருவதையே மறந்துவிட வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இதனையடுத்து நள்ளிரவு முதல் நாடு முழுவதும் லாக்டவுன் நடைமுறைக்கு வந்தது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் லாக்டவுனை போலீசார் தீவிரமாக அமல்படுத்தியும் வருகின்றனர்.

இந்த நிலையில் அயோத்தியில் இன்று அதிகாலை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் சாமியார்கள் அடங்கிய குழு சிறப்பு பூஜை நடத்தியது. அயோத்தியில் 27 ஆண்டுகளுக்கு முன்னர் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்ட ராமர் சிலை அங்கிருந்து எடுக்கப்பட்டது. பின்னர் புதிய கோவில் கட்டக் கூடிய இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

நியூயார்க்கில் மட்டும் 20000 பேருக்கு கொரோனா.. செத்து மடியும் மக்கள்.. அதிர்ச்சியில் அமெரிக்கா நியூயார்க்கில் மட்டும் 20000 பேருக்கு கொரோனா.. செத்து மடியும் மக்கள்.. அதிர்ச்சியில் அமெரிக்கா

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஒட்டு மொத்த நாட்டு மக்களும் தங்களை வீடுகளுக்குள் முடக்கியிருக்கும் நிலையில் ஒரு மாநில முதல்வரே இதுபோல் பொதுநிகழ்ச்சியில் பங்கேற்றது சர்ச்சையாகி உள்ளது.

English summary
Uttar Pradesh Chief Minister Yogi Adityanath today attended a ceremony at the Ram Janmabhoomi in Ayodhya.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X