For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஞ்சாப், ஹரியானா வன்முறை : ரயில்கள் ரத்து, ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு

தேரா சச்சா சவுத் சாமியார் ராம் ரஹீமின் ஆதரவு குண்டர்கள் பஞ்சாப், ஹரியானாவில் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடுவதால் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: பஞ்சாப், ஹரியானா, ராஜாஸ்தானில் சாமியார் ராம் ரஹீம் ஆதரவாளர்களின் வன்முறை வெறியாட்டம் காரணமாக நூற்றுக்கணக்கான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களுக்கும், ரயில்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேரா சச்சா சவுத் அமைப்பின் தலைவரான சாமியார் ராம் ரஹீம் பக்தை ஒருவரை பலாத்காரம் செய்தார் என்பது வழக்கு. இந்த வழக்கில் சாமியார் ராம் ரஹீம் குற்றவாளி என ஹரியானாவின் பஞ்ச்குலா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சிபிஐ நீதிமன்றத் தீர்ப்பு இன்று நண்பகல் வெளியானது. இதை, அடுத்து அங்கு குவிந்திருந்த ஆதரவாளர்கள் கலவரத்தில் இறங்கினர்.கண்ணில் கிடைத்த பத்திரிகையாளர்களை கலவரக்காரர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கினர்.

ஊடக சாதனங்கள் சேதம்

ஊடக சாதனங்கள் சேதம்

கலவரத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த இந்தி மற்றும் ஆங்கிலத் தொலைகாட்சி ஊடகங்கள் மீதும் கலவரக்கும்பல் கைகளில் இருந்த கட்டைகள் மற்றும் கற்களால்வாகனங்களை தாக்கத் துவங்கினர். லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஊடகச்சாதனங்கள் சேமடைந்தன.

17 பேர் பலி

17 பேர் பலி

நேரடி ஒளிபரப்பு சாதனத்தை சாய்த்து அதன் மீது தீவைத்து கொளுத்தினர். இந்த வாகனம் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. கலவரக்காரர்களை கண்ணீர்புகை குண்டுகள் வீசி கும்பலை கலைக்க முயற்சிக்கப்பட்டது.

கலவரத்தினால் 17 பேர் பலியாகினர், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயம்பட்ட சிகிச்சைகளுக்காக பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு

ஊரடங்கு உத்தரவு

இதற்கிடையே, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் பெரோஸ்பூர், மன்ஸா, பட்டிண்டா, பட்டியாலா, குருசேத்திரா மற்றும் சங்ரூர் உட்படப் பல மாவட்டங்களிலும் கலவரம் பரவியது இதனால், அதன் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ரயில்கள் ரத்து

ரயில்கள் ரத்து

டெல்லி ஆனந்த் விஹார் என்ற இடத்தில் 2 ரயில் பெட்டிகளுக்கு கலவரகாரர்கள் தீவதை்து எரித்துள்ளனர். தீவைத்த ரேகா விரைவு ரயிலின் 2 பெட்டிகள் தீயில் எரிந்து கருகியுள்ளது. டெல்லி, ஹரியானா, பஞ்சாப் செல்லும் நூற்றுக்கணக்கான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களுக்கும், ரயில்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

English summary
As many as 100 trains have cancelled ahead as a CBI court in Panchkula will pronounce verdict against Dera Sacha Sauda chief Gurmeet Ram Rahim Singh Insaan in connection with a decade old rape case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X