For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமருக்கு பிரம்மாண்ட கோவில்.. அயோத்தியில் பூமி பூஜை.. எங்கெங்கும் நிறைந்து காணப்படும் பிரதமர் மோடி!

Google Oneindia Tamil News

அயோத்தி: ராமருக்கு பிரம்மாண்ட கோவில் கட்டப்படும் நிலையில் அயோத்தி முழுவதும் எங்கெங்கும் பிரதமர் நரேந்திர மோடி நிறைந்து காணப்படுகிறார்.

நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு ராமர் கோயில் கட்டுவதற்கான அனுமதியை சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு வழங்கியது. இந்த நிலையில் இன்று சர்ச்சைக்குரிய இடமாக கருதப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது.

Recommended Video

    Why Modi Plant a Parijat tree Ram Temple Ceremony? | Parijaat tree | Oneindia Tamil

    இதனால் அயோத்தி முழுவதும் விழா கோலம் பூண்டிருந்தது. அயோத்தியில் இன்றைய தினம் பூமி பூஜைக்கான ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்று வந்த நிலையில் இரு உண்மையான விஷயங்கள் தெளிவாகிறது. ஒன்று, பல ஆண்டுகளாக சிறிய இடத்தில் வசித்த ராமருக்கு பாபர் மசூதி இடிக்கப்பட்டு 28 ஆண்டுகளுக்கு பிறகு இன்றைய தினம் 3 அடுக்குகள் கொண்ட பிரம்மாண்டமான கோவில் எழவுள்ளது.

    ராம ஜென்ம பூமிக்கு இன்று சுதந்திரம் கிடைத்துள்ளது.. கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி உரைராம ஜென்ம பூமிக்கு இன்று சுதந்திரம் கிடைத்துள்ளது.. கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி உரை

    விழா

    விழா

    இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி தலைமையேற்கிறார். பலர் இந்த நிகழ்ச்சிக்கு குறிக்கப்பட்ட நேரம் குறித்து பரவலாக பேசினர். பல ஆலோசனைகளுக்கு பிறகு பூமி பூஜைக்கான நேரம் பகல் 12:15:05 முதல் 12:15:38 வரை என குறிக்கப்பட்டது. அதாவது சரியாக வெறும் 33 விநாடிகளில் இந்த பூஜை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இந்த விழாவை காண பெரிய திரைகள் போடப்பட்டு அதில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

    விழா

    விழா

    இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி தலைமையேற்கிறார். பலர் இந்த நிகழ்ச்சிக்கு குறிக்கப்பட்ட நேரம் குறித்து பரவலாக பேசினர். பல ஆலோசனைகளுக்கு பிறகு பூமி பூஜைக்கான நேரம் பகல் 12:15:05 முதல் 12:15:38 வரை என குறிக்கப்பட்டது. அதாவது சரியாக வெறும் 33 விநாடிகளில் இந்த பூஜை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இந்த விழாவை காண பெரிய திரைகள் போடப்பட்டு அதில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

    இமேஜ்

    இமேஜ்

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி வரலாற்று சாதனை படைத்தது மோடி அரசு. அது போல் இந்த ஆண்டு அதே தேதியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை போடப்பட்டுள்ளது. இரண்டுமே வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வுகளாகும். வந்திருந்த சாமியார்களும் வேறு எந்த விஷயத்தை பேசவில்லை. மோடியின் இமேஜ் குறித்தும் கோயில் குறித்தும் மட்டுமே பேசினர்.

    கோயில் திறப்பு

    கோயில் திறப்பு

    சாலைகளில் ஜெய் ஸ்ரீராம் கோஷமும் மோடி ஜிந்தாபாத் கோஷமும் விண்ணை பிளந்தன. இதில் விசேஷம் என்னவென்றால் பிப்ரவரி அல்லது மார்ச் 2024 ஆம் ஆண்டு தற்போது பூமி பூஜை செய்யப்பட்ட இந்த கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்வுக்கு பிறகு அடுத்த மக்களவை தேர்தல் வர சில மாதங்களே இருக்கும் நிலையில் அவர் அந்த கோயிலை திறந்து வைக்கிறார்.

    English summary
    Ayodhya Ram Temple event has just one message all about PM Narendra Modi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X