For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடே பெருந்துயரில் இருக்க அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள்!

Google Oneindia Tamil News

அயோத்தி: ஒட்டுமொத்த தேசமே கொரோனா தொற்று நோய் அச்சத்தால் உறைந்திருக்கும் நிலையில் எந்த சலனமுமில்லாமல் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் நேற்று தொடங்கப்பட்டுள்ளன.

Recommended Video

    லாக் டவுனை மீறினால் கடும் நடவடிக்கை - அரசு எச்சரிக்கை

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையையும் மத்திய அரசு அமைத்துள்ளது.

    Ram temple construction begins in Ayodhya

    இதனையடுத்து அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்பட்டு வருகின்றன. முறைப்படியான கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் அயோத்தியில் புதிய கோவிலில் ராமர் சிலையை வைக்கும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பூஜை நேற்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    கொரோனா பரபரப்புக்கு மத்தியில் பிறந்தது மயிலாடுதுறை புதிய மாவட்டம்.. முதல்வர் அறிவிப்பு! கொரோனா பரபரப்புக்கு மத்தியில் பிறந்தது மயிலாடுதுறை புதிய மாவட்டம்.. முதல்வர் அறிவிப்பு!

    இச்சிலை நாளை புதிய இடத்துக்கு மாற்றி அமைக்கப்பட இருக்கிறது. ஒட்டுமொத்த நாடும் கொரோனா தொற்று நோய் அச்சத்தால் உறைந்திருக்கிறது. ஆனால் இதைப்பற்றி எந்த ஒரு கவலையுமே இல்லாமல் அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கான நடவடிக்கைகள் தொடருவது சர்ச்சையாகி உள்ளது.

    English summary
    The first phase of construction of a Ram temple in Ayodhya has begun on Monday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X