For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நல்ல வேளை நரேந்திர மோடி ராகுல் காந்தி இல்லை.. ராமச்சந்திர குஹா பரபரப்பு பேச்சு

Google Oneindia Tamil News

கோழிக்கோடு: காங்கிரஸ் குடும்பத்தின் 5ஆவது தலைமுறையான ராகுல் காந்திக்கு கடின உழைப்பாளியும், தானாக இந்த நிலைக்கு உயர்ந்த மோடியை எதிர்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என வரலாற்றாய்வாளர் ராமசந்திர குஹா தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இலக்கிய திருவிழாவின் இரண்டாவது நாளான நேற்று வரலாற்று ஆய்வாளர் ராமசந்திர குஹா கலந்து கொண்டார். அதில் அவர் தேசபக்தியும் போர் குணமும் என்ற தலைப்பில் அவர் பேசினார்.

அப்போது கேரள மக்கள் முன் அவர் பேசுகையில் சுதந்திர இந்தியாவின் போது மிகப் பெரிய கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது குடும்ப கட்சியாக மாறிவிட்டதே இந்தியாவில் இந்துத்துவாவும் போராடும் குணமும் தலைத் தூக்க காரணம்.

காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் எங்களை விட குறைவான வாக்குகளையே பெறுவீர்.. சீமான் ஆவேசம்காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் எங்களை விட குறைவான வாக்குகளையே பெறுவீர்.. சீமான் ஆவேசம்

தலைமை தேவையில்லை

தலைமை தேவையில்லை

தனிப்பட்ட முறையில் ராகுலுக்கும் எனக்கும் ஒரு பிரச்சினையும் கிடையாது. அவர் மரியாதைக்குரிய நபர், ஒழுக்கமான, நன்னடத்தை கொண்டவர். ஆனால் இளைஞர்களை கொண்ட இந்தியாவுக்கு 5ஆவது தலைமுறையை சேர்ந்த தலைமை தேவையில்லை.

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

மலையாள மக்களாகிய நீங்கள் ஒரு தவறு இழைத்துவிட்டீர்கள் என்றால் அது ராகுலை வயநாட்டில் தேர்வு செய்ததுதான். குடும்ப ஆதிக்கத்தால் உத்தரப்பிரதேசத்தில் தோல்வி அடைந்த ஒருவருக்கு நீங்கள் வாய்ப்பு வழங்கியுள்ளீர்கள். வரும் 2024-லும் நீங்கள் இதே தவறை செய்தால், அது நரேந்திர மோடிக்குத்தான் நன்மை.

15 ஆண்டுகள்

15 ஆண்டுகள்

நரேந்திர மோடியின் சிறந்த நன்மை என்னவென்றால் அவர் ராகுல் காந்தியாக இல்லாததே ஆகும். கட்சியில் பல பொறுப்புகளை தானாகவே வளர்ந்து வகித்தவர் மோடி. 15 ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தை ஆண்டார்.

தீவிரம்

தீவிரம்

அவருக்கு நிர்வாக திறமை உண்டு. ஐரோப்பாவுக்கு சென்று அவர் ஒருபோதும் விடுமுறை எடுக்கவில்லை. அவர் நம்பத்தகாத வகையில் கடின உழைப்பாளி. என்னை நம்புங்கள். நான் இவற்றை தீவிரமாக கூறி் வருகிறேன்.

தலைமுறை

தலைமுறை

ராகுல் காந்தியும் மேற்கண்ட நல்ல விஷயங்களை கொண்டவர்தான். ஆனால் அவரது குடும்பத்தினரே தலைமுறை தலைமுறையாக பதவியை வகித்து வருகிறார். ராகுல் தானாக முன்னுக்கு வரவில்லை என்றார் குஹா. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடிய போது பெங்களூரில் குஹா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Historian and social activist Ramachandra Guha says that the biggest advantage of PM Narendra Modi is that he is not Rahul Gandhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X