For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாரணாசியில் ராம்தேவ் முகாம்களை நடத்த அனுமதிக்க கூடாது: ஆம் ஆத்மி கோரிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: வாரணாசி தொகுதியில் ராம்தேவ் யோகா முகாம்களை நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என்று ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

யோகா குருவான ராம்தேவ் தன்னுடைய சர்ச்சைக்குரிய பேச்சுகளால் லக்னோ மற்றும் அமேதிக்குள் நுழைவதற்கு தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டார். இந்நிலையில் நாளை வாரணாசியில் யோகா முகாம்களை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார் ராம்தேவ்.

ஆனால் ராம்தேவின் யோகா முகாம்களை அனுமதிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு ஆம் ஆத்மி கோரிக்கை விடுத்துள்ளது. வாரணாசியில் போட்டியிடும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலின் பிரச்சார மேலாளரான கோபால் மோகன் இதுபற்றி தேர்தல் அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், யோகா முகாம்கள் வாரணாசி தொகுதியில், தேர்தல் முடிவுகள் வரும்வரை அனுமதிக்கப்படாமல் இருப்பதே பாதுக்காப்பானதாகும் எனக் கூறியுள்ளார்.

மேலும் தங்களது கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தால் போராட்டத்துவோம் என்றும் ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

English summary
Having been banned from Lucknow and Amethi for his anti-Dalit comments, yoga guru Ramdev has trained his eyes on Varanasi. Posters announcing a yoga shivir by him on May 4 have come up in the city but Ramdev's entry is being strongly opposed by the Aam Aadmi Party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X