For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பித்தலாட்டம்.. வாட்ஸ்அப்புக்கு போட்டியாக பதஞ்சலி அறிமுகப்படுத்திய கிம்போ ஆப் ப்ளே ஸ்டோரில் நீக்கம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    வாட்ஸ் அப்பிற்கு போட்டியாக கிம்போ..களமிறங்கிய பதஞ்சலி..வீடியோ

    டெல்லி : வாட்ஸ்அப்புக்கு போட்டியாக பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட கிம்போ என்ற மெசேஜ் ஆப் பிளே ஸ்டோரில் இருந்து மாயமாகியுள்ளது.

    கூகுள் பிளே ஸ்டோரில் நேற்று கிம்போ வெளியிடப்பட்ட பிறகு 3 மணி நேரத்தில் சுமார் 1.5 லட்சம் பேர் தரவிறக்கம் செய்திருந்தனர். ஆனால், அந்த மெசேஜ் பயனாளர்கள் தகவல்களை சேகரித்து பொது வெளிக்கு கொடுக்க வாய்ப்பு இருப்பதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்க ஆரம்பித்தனர்.

    Ramdevs Kimbho messaging app taken down from Google Play Store

    இதற்கு காரணம், போலோ என்ற பெயரில் ஏற்கனவே வெளியாகி தகவல் திருட்டு காரணமாக கூகுள் பிளே நீக்கம் செய்த ஒரு ஆப்பின் நகல்தான் கிம்போவாம்.

    கிம்போ ஆப் பதிவிறக்கம் செய்ததும், செல்போனுக்கு வரும் OTPயில் கூட போலோ என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அளவுக்கு ஈயடிச்சான் காப்பி அடித்துள்ளார்கள் கிம்போ உருவாக்கிய குழுவினர்.

    அதிர்ச்சியடைந்தனர் பயனாளிகள். இந்த நிலையில், கிம்போ ஆப் சிலமணி நேரத்தில் பிளே ஸ்டோரில் இருந்து காணாமல் போயுள்ளது. இப்போது கிம்போ என்ற பெயரில் போலி ஆப்களும் நடமாடுகின்றன. இது என்னடா போலிக்கே போலியா என சிரிக்கிறார்கள் நெட்டிசன்கள்.

    இதனிடையே மீண்டும் மாற்றம் செய்து கிம்போ வெளியிடப்படும் என பதஞ்சலி நிறுவன செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

    English summary
    Ramdev’s Kimbho might not have had the most auspicious start, but the company has now given an explanation for why the app was taken down.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X