For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு ஆவணங்களில் இனி அம்பேத்கர் பெயருடன் ராம்ஜி என பெயர் சேர்ப்பு: உ.பி. அரசு உத்தரவு

அரசு ஆவணங்களில் இனி அம்பேத்கரின் பெயருடன் ராம்ஜி என்ற பெயர் சேர்க்க உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

லக்னோ: அரசு மற்றும் நீதிமன்ற ஆவணங்களில் அம்பேத்கரின் பெயருடன் ராம்ஜி என்ற பெயர் சேர்க்கப்பட வேண்டும் என்று உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 2017-ஆம் ஆண்டு அரசு ஆவணங்களில் அம்பேத்கரின் பெயரில் எழுத்துப்பிழை உள்ளது குறித்து பிரதமர் மற்றும் உ.பி. முதல்வரின் கவனத்துக்கு ஆளுநர் ராம் நாயக் எடுத்து சென்றார்.

Ramji to be part of Ambedkars name: UP government orders

மகாராஷ்டிராவில் தந்தையின் பெயரில் ஒரு பகுதி மகனின் பெயருக்கு இடையில் வரும் நடைமுறை இருந்து வருகிறது. அதன்படி அம்பேத்கரின் தந்தையின் பெயர் ராம்ஜி. அதை அவரது பெயரில் சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் பரிந்துரைத்தார்.

மேலும் இந்திய அரசியல் சாசன பக்கங்களில் அம்பேத்கர் ராம்ஜி பீம்ராவ் என்றே அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். எனவே உ.பி. அரசு ஆவணங்கள் மற்றும் நீதிமன்றங்களில் உள்ள ஆவணங்களில் அம்பேத்கர் பீம்ராவ் என்பதை அம்பேத்கர் ராம்ஜி பீம்ராவ் என மாற்றுமாறு ஆளுநர் பரிந்துரையின் பேரில் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

English summary
The UP government passes an order that Dr Bhimrao Ambedkar in documents and records with Dr Bhimrao Ramji Ambedkar. This name was signed by him in the pages of Indian Constitution.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X