For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடடே! ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் கான்பூருக்கும் பூர்வ ஜென்ம பந்தம் உள்ளதோ?

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள கல்யாண்பூரைச் சேர்ந்தவர் பாஜக ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த். கான்பூரில் எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமாரின் உறவினர்களும் வசிக்கின்றனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

லக்னோ: பாஜக ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்க்கு கான்பூரில் உள்ள கல்யாண்பூர் சொந்த ஊர். அதே ஊரில் எதிர்க்கட்சி வேட்பாளரான மீராகுமாரின் உறவினர்களும் வசிக்கின்றனர்.

'உத்தரப்பிரதேசம் வரும் போதெல்லாம் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்' என அண்மையில் உத்தரப்பிரதேசம் வந்த மீரா குமார் கூறினார். நாளை ஜனதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. அதில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் மீராகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ராம்நாத் கோவிந்துக்கு கான்பூர் அருகே உள்ள கல்யாண்பூர் சொந்த ஊர் என்றாலும் மீராகுமாரின் உறவினர்கள் இங்கு அதிகம் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் கான்பூருடன் தொடர்புடையவாரகவே மீராகுமார் இருக்கிறார்.

மென்மையானவர்..

மென்மையானவர்..

கான்பூர் அருகேயுள்ள கல்யாண்பூரில், ராம் நாத் கோவிந்த், மகரிஷி தயானந்த் விஹார் என்னும் இடத்தில் தான் குடியிருந்தார். அங்குள்ள அவரது பக்கத்து வீட்டார், அவர் மென்மையாகப் பேசக் கூடியவர் என கூறியுள்ளனர். மேலும் அவரது கடுமையான உழைப்பால் தான் அவர் இந்த உயரத்தை அடைந்தார் எனவும் கூறியுள்ளனர்.

 பர்சனல் செகரட்டரி

பர்சனல் செகரட்டரி

சட்டப்படிப்பை படித்துள்ள அவர் ஐஏஎஸ் ஆக முயற்சித்தார். ஆனால், உடல்நலக் கோளாறால் அம்முயற்சியைக் கைவிட்டார் என்றார் அசோக் திரிவேதி. இவர் ராம்நாத் எம்.பியாக பதவி வகித்த போது பர்சனல் செகரட்டரியாக இருந்தவர்.

 இனிப்பு தவிர்ப்பு

இனிப்பு தவிர்ப்பு

மேலும், ராம்நாத் மிகவும் எளிமையான உணவுகளையே சாப்பிடுவார் என்றும், அதிகம் இனிப்புகள் சாப்பிடமாட்டார் என்றும் கூறினார். மகரிஷி தயானந்த் விஹாருக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தன் மனைவி சவீதாவுடன் வந்தார் என அக்கம்பக்கத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Recommended Video

    Presidential Election 2017, Ramnath kovind Biography-Oneindia Tamil
     லஷ்மி சாகலும் கான்பூர்

    லஷ்மி சாகலும் கான்பூர்

    கான்பூரைச் சொந்தமாகக் கொண்டவர் ராம்நாத் கோவிந்த் என்றாலும் அவருக்கு முன்பு ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமை எதிர்த்துப் போட்டியிட்ட லஷ்மி சாகலும் கான்பூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கான்பூருக்கும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் சிறப்புப் பொருத்தம் இருக்கும் போல.

    English summary
    Ramnath Govind is simple and soft sying his friends and relatives in Kanpur. Ramnath govind is BJP's presidential candidate. Opposite party candidate Meira kumar also has connection with Kanpur.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X