For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அசாம் தேர்தல்.. ரஞ்சன் கோகாய் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக வாய்ப்பு.. தருண் கோகாய் கணிப்பு!

Google Oneindia Tamil News

திஸ்பூர்: முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அசாம் சட்டசபை தேர்தலில் பாஜக சார்பாக முதல்வர் வேட்பாளராக களமிறங்க வாய்ப்புள்ளது என்று தருண் கோகாய் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் தருண் கோகாய் அசாம் மாநில முன்னாள் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்... China, Pakistan-க்கு India கொடுத்த எச்சரிக்கை

    முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ரபேல் வழக்கு, அயோத்தி வழக்கு உள்ளிட்ட முக்கியமான வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கியவர். இவர் தற்போது ராஜ்யசபா எம்பியாக இருக்கிறார்.

    பாஜக சார்பாக இவர் ராஜ்ய சபாவிற்கு தேர்வாகி உள்ளார். இந்த நிலையில் இவர் அசாம் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட வாய்ப்புள்ளது என்று தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அசாம் முதல்வர் தருண் கோகாய் தெரிவித்துள்ளார்.

    ஸ்டெர்லைட் ஆலை...உச்ச நீதிமன்றத்தில்...தமிழக அரசு கேவியட் மனு!! ஸ்டெர்லைட் ஆலை...உச்ச நீதிமன்றத்தில்...தமிழக அரசு கேவியட் மனு!!

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    இது தொடர்பாக தருண் கோகாய் அளித்துள்ள பேட்டியில், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அசாம் சட்டசபை தேர்தலில் பாஜக சார்பாக முதல்வர் வேட்பாளராக களமிறங்க வாய்ப்புள்ளது. எனக்கு இது தொடர்பான தகவல்கள் வந்தது. நம்ப தகுந்த தகவல்கள் வருகிறது. ரஞ்சன் கோகாய் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.

    அடுத்த வேட்பாளர்

    அடுத்த வேட்பாளர்

    இவர் ஏற்கனவே ராஜ்ய சபா எம்பி பதவியை ஏற்றுக்கொண்டு விட்டார். எம்பி பதவியை இவரால் ஏற்றுக்கொள்ள முடிகிறது என்றால் கண்டிப்பாக இவரால் முதல்வர் வேட்பாளர் பதவியையும் ஏற்றுக்கொள்ள முடியும். அசாமில் பாஜகவிற்கு என்று பெரிய முகம் இல்லை. அதனால் ரஞ்சன் கோகாய் நிற்க வாய்ப்புள்ளது.

    எல்லாம் அரசியல்

    எல்லாம் அரசியல்

    இது எல்லாமே அரசியல்தான். பாஜக ரஞ்சன் கோகாய் மீது நம்பிக்கையில் உள்ளது. ரபேல் தீர்ப்பு மூலமும் , அயோத்தி தீர்ப்பு மூலமும் பாஜகவை கோகாய் சந்தோஷப்படுத்திவிட்டார். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக ரஞ்சன் கோகாய் அரசியலுக்கு வந்தார். பாஜகதான் அவரை அரசியலுக்கு கொண்டு வந்தது. அதை கோகாய் மறுக்கவில்லை.

    பாஜக ஆதரவு

    பாஜக ஆதரவு

    இவர் தனக்கு எம்பி பதவி அளிக்கப்பட்ட போது அதை எதிர்க்கவில்லை. இவர் நினைத்து இருந்தால் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் கூட ஆகி இருக்க முடியும். ஆனால் ரஞ்சன் கோகாய் அதை விரும்பவில்லை. இவருக்கு அரசியல் ஆசை இருந்தது. அதை பாஜக சரியாக பயன்படுத்திக் கொண்டது என்று ரஞ்சன் கோகாய் குறித்து தருண் கோகாய் கூறியுள்ளார்.

    English summary
    Ranjan Gogoi may contest in Assam election as Chief Minister candidate for BJP says ex cm Tarun Gogoi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X