For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரில் அடுத்த பரபரப்பு.. அதிரடி படை வீரர்களை களமிறக்கிய இந்திய ராணுவம்.. பதற்றம்!

காஷ்மீர் மாநிலம் பூன்ச் பகுதியில் திடீர் என்று அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு வருவதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் பூன்ச் பகுதியில் திடீர் என்று அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு வருவதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

காஷ்மீரை நோக்கி கடந்த சில நாட்களாக இந்திய ராணுவப்படை குவிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் அங்கு 75 ஆயிரம் வீரர்கள் புதிதாக களமிறக்கப்பட்டு உள்ளனர்.

Rapid Action Force deployed in Kashmir

இனி வரும் நாட்களில் இன்னும் கூடுதலாக துணை ராணுவப்படை வீரர்கள் அங்கு களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சென்ற வாரம் மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீர் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரில் நடக்கும் ஆபரேஷன் சிவா.. இந்திய ராணுவத்தின் அதிரடி திட்டம்.. வேலையை தொடங்கிய வீரர்கள்!காஷ்மீரில் நடக்கும் ஆபரேஷன் சிவா.. இந்திய ராணுவத்தின் அதிரடி திட்டம்.. வேலையை தொடங்கிய வீரர்கள்!

தற்போது அங்கு வீரர்கள் தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மீரை மத்திய அரசு மூன்றாக பிரிக்க முயற்சி செய்கிறது என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி உள்ளது.

காஷ்மீர் மாநிலத்திற்குள் மத்திய அரசு பெரிய நடவடிக்கை எதையோ எடுக்க போகிறது என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தற்போது காஷ்மீர் மாநிலம் பூன்ச் பகுதியில் திடீர் என்று அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு வருவதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

மிகவும் இக்கட்டான நிலையில் மட்டுமே அமைதியை நிலைநாட்ட இது போன்ற பாதுகாப்பு படையின் ஒரு பிரிவான அதிரடிப்படையினர் களமிறக்கப்படுவார்கள். மக்கள் கிளர்ச்சியை தடுக்க உதவ அதிரடிப்படையினர் களமிறக்கப்படுவார்கள்.

ஆனால் அப்படிப்பட்ட அதிரடிப்படையினர் காஷ்மீரில் அமைதி நிலவும் இந்த நேரத்தில் களமிறக்கப்பட்டு இருக்கிறார்கள். மத்திய அரசு பூன்ச் பகுதியில் எதையோ செய்ய இருக்கிறது. அதனால்தான் அதிரடிப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வருகிறது.

English summary
Rapid Action Force deployed in Kashmir amidst raising tension.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X