For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை வானில் “நீல நிலவு”- ஒரே மாதத்தில் இது 2வது பெளர்ணமி!

Google Oneindia Tamil News

டெல்லி: வானில் ஒரே மாதத்தில் இரண்டு பெளர்ணமி தோன்றும் அரிய நிகழ்வான "புளூ மூன்" என்ற நிகழ்வு நாளை நடைபெற உள்ளது.

ஒரு மாதத்தில் 2 பெளர்ணமி நிகழ்கிறபோது 2வது பெளர்ணமி "நீல நிலவு" அதாவது புளூ மூன் என அழைக்கப்படுகிறது.

Rare blue moon comes Friday

கடந்த 2ஆம் தேதி பெளர்ணமி வந்தது. இப்போது மீண்டும் நாளை பெளர்ணமி வருகிறது. நிலவு முழு நிலவாக தோன்றும். இதுவே நீல நிலவு அழைக்கப்படும். நீல நிலவு என்று கூறினாலும் நீல நிறத்துக்கும், நிலவின் நிறத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

ஒரே மாதத்தில் 2 பெளர்ணமி வருவது அதாவது நீல நிலவு வருவது அபூர்வமானது என்று ஹைதராபாத்தில் உள்ள பி.எம்.பிர்லா அறிவியல் மையத்தின் இயக்குனர் டாக்டர் சித்தார்த் அறிக்கையில் கூறி உள்ளார்.

மேலும் ‘‘நேற்று தொடங்கி ஆகஸ்டு மாதம் 6 ஆம் தேதி இடையே "டெல்டா அக்குவாரிட் விண்கற்கள்" பொழிவு இருக்கும். ஆனால் பெளர்ணமி காரணமாக விண்கற்கள் பொழிவை பார்ப்பதற்கு சாதகமான சூழல் இல்லை'' எனவும் அவர் அந்த அறிக்கையில் கூறி இருக்கிறார்.

English summary
If anything unusual happens to you Friday, you'll be right to say it was "once in a blue moon."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X