For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளாவில் வெகுவேகமாக பரவும் மர்ம நோய்.. தொடரும் பலி.. எலி காய்ச்சல் என்றால் என்ன?

கேரளாவில் எலி காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் எலி காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

கேரளாவில் பரவி வரும் எலி காய்ச்சல் காரணமாக இதுவரை, 23 பேர் பலியாகி உள்ளனர். வெள்ளத்தை தொடர்ந்து தற்போது அங்கு இந்த எலி காய்ச்சல் ஆட்டிப்படைகிறது.

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் 483 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு முன் கேரளாவை நிபா வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

எலி காய்ச்சல் என்றால் என்ன?

எலி காய்ச்சல் என்றால் என்ன?

எலி காய்ச்சல் எலியின் சிறுநீரகம் மூலம் பரவ கூடியது. எலியின் சிறுநீர், கழிவு பொருட்கள் கலந்த நீரில் தொடர்பு ஏற்பட்டு இருந்தால் இந்த காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் மருத்துவ பெயர் லெப்டோஸ்பிரோசிஸ் காய்ச்சல் ஆகும். இது ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கும் பரவும்.

அறிகுறி என்ன

அறிகுறி என்ன

அதிக காய்ச்சல், தலைவலி, உடல் வெப்பநிலை குறைவது, உடல் வலி, வாந்தி எடுப்பது, மஞ்சள்காமாலை, கண்கள் சிவந்து போவது, வயிற்று வலி, பேதி, சொறி, அரிப்பி ஆகியவை இதற்கு அறிகுறியாகும். மிகவும் சாதாரண நோய்க்கு வரும் அறிகுறிதான் இதற்கும் வரும். அதனால், இதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் ஆகும்.

மிகவும் மோசம்

மிகவும் மோசம்

இது காட்டுத்தீ போல பரவும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இது மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் குணப்படுத்துவது மிகவும் கடினம் ஆகும். இதை 10 நாட்கள் இருந்தால், நோயாளி மரணம் அடைய வாய்ப்புள்ளது. இது முழுமையாக குணமடைய 4 வார தீவிர சிகிச்சை அவசியம்.

கேரளாவில் எதற்காக

கேரளாவில் எதற்காக

கேரளாவில் இது ஏற்பட காரணம் வெள்ளம்தான். வெள்ளத்தில் எலிகள் உட்பட நிறைய உயிரினங்கள் மூழ்கியது. இதன் கழிவுகள் தற்போது நீரில் உள்ளது. இதனுடன் நேரிடி தொடர்பு ஏற்பட்ட காரணத்தால், இந்த நோய் உருவாகி உள்ளதாக கேரளா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

English summary
After Flood Scenario: Kerala hit by Rat Fever, Kills 23 people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X