For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூபாய் நோட்டு பிரச்சினையால் நடுத்தர மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்: ரத்தன் டாடா

பணப்பற்றாக்குறையால் பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருவதாக ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் நடுத்தர மக்கள் பெரிதும் சிரமப்படுவதாக ரத்தன் டாடா கருத்து தெரிவித்துள்ளார். பணப்பற்றாக்குறையால் பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மக்கள் மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியாகி 16 நாட்களை கடந்து விட்ட போதிலும், சாதரண, நடுத்தர மக்கள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காகவும், புதிய ரூபாய் நோட்டுகளை பெறுவதற்காகவும் வங்கி, ஏடிஎம்களில் நீண்ட வரிசையில் நிற்கவேண்டிய சூழலே நிலவி வருகிறது.

 Ratan Tata advises government to take emergency measures on Demonetisation

இதனிடையே இன்றுடன் புழக்கத்திலுள்ள ரூபாய் நோட்டுக்கள் அரசின் பல்வேறு சேவைகளிலும் செல்லுபடியாவதற்கு கடைசி நாளாகும். இந்த நிலையில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் நடுத்தர மக்கள் பெரிதும் சிரமப்படுவதாக ரத்தன் டாடா கூறியுள்ளார்.

பணப்பற்றாக்குறையால் பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார். தேசிய பேரழிவின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தற்போது மேற்கொள்ள வேண்டும் என்றும் ஏழை எளிய மக்களின் அன்றாடத் தேவைகள் நிறைவேற அரசு அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும்டாடா தெரிவித்துள்ளார்.

English summary
Tata Sons chairman Ratan Tata advises government to take emergency measures on Demonetisation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X