For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டாடா குழும எதிர்கால வெற்றிக்கு மிஸ்திரி நீக்கம் அவசியமானது: ரத்தன் டாடா விளக்கம்

சைரஸ் மிஸ்திரியின் நீக்கும் கடினமான முடிவை மிகக் கவனமாக டாடா குழுமம் எடுத்துள்ளது என ரத்தன் டாடா கூறியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: டாடா குழுமத்தின் எதிர்கால வெற்றிக்கு சைரஸ் மிஸ்திரியின் நீக்கம் அவசியானது என டாட குழும இடைக்கால தலைவராக பொறுப்பேற்றுள்ள ரத்தன் டாடா தனது ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

2012ல் டாடா சன்ஸ் நிறுவன தலைவராக நியமிக்கப்பட்ட சைரஸ் மிஸ்திரி, நிறுவனத்தின் போர்டு உறுப்பினர்களால் கடந்த அக்டோபர் 24ம் தேதி அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். சைரஸ் மிஸ்திரி நீக்கத்தைத் தொடர்ந்து டாடா சன்ஸ் நிறுவன இடைக்காலத் தலைவராக ரத்தன் டாட்டா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

Ratan Tata terms Cyrus Mistry's removal as well-considered but difficult decision

புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியில் குழு ஈடுபட்டுள்ளது என்றும், டாடா குழும நிறுவனங்கள் பங்குச் சந்தையில் அதன் ஸ்திரத்தன்மையை இழந்து விடக்கூடாது என்றும் ரத்தன் டாடா கூறியுள்ளார். இந்நிலையில் டாடா குழுமத்தின் எதிர்கால வெற்றிக்கு மிஸ்திரியின் நீக்கம் அவசியம் என ரத்தன் டாடா தனது ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், டாடா குழுமத்தின் நிலைத்தன்மை மற்றும் உறுதியான தலைமைக்கு பணியாற்றுவேன். மிஸ்திரியை நீக்கும் கடினமான முடிவை மிகக் கவனமாக டாடா குழுமம் எடுத்துள்ளது.. நீண்ட பரிசீலனைக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறு அந்த கடிதத்தில் ரத்தன் டாடா கூறியுள்ளார்.

English summary
As ousted Tata Group Chairman Cyrus Mistry stepped up attack, Ratan Tata on Wednesday hit back saying his removal was "absolutely necessary" for the future success of the Tata group.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X