For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய ரூ.50 நோட்டுக்களை அறிமுகம் செய்தது ஆர்.பி.ஐ! புழக்கத்திலுள்ள நோட்டுக்கள் என்னவாகும் தெரியுமா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி புதிய ரூ.50 வகை ரூபாய் நோட்டுகளை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது. பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகு அறிமுகமாகும் 3வது வகை ரூபாய் நோட்டு இதுவாகும்.

ஏற்கனவே ரூ. 2,000 மற்றும் ரூ.500 ஆகிய மதிப்புகளில் புது ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

RBI introduces new ₹50 currency notes on Friday

புதிய ரூ.50 நோட்டு 66 மிமீ x 135 மிமீ பரப்பு கொண்டதாக இருக்கும், மேலும் ஒருபக்கம் ஹம்பி ரதம் புகைப்படமும், ஒருபக்கம் மகாத்மா காந்தியடிகள் போட்டோவும் இடம் பெற்றுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் ஆர். படேலின் கையொப்பத்துடன் இந்த நோட்டுகள் அறிமுகமாகியுள்ளது. நீல வண்ணத்தில் இந்த நோட்டு உள்ளது. அதேநேரம், தற்போது புழக்கத்திலுள்ள பழைய ரூ.50 நோட்டுகளும் செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Reserve Bank of India on Friday introduced new ₹ 50 denomination notes. This is the third currency note that has been introduced post-demonetisation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X