For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீர் சாலை விபத்தில் 22 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

By Karthikeyan
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 22 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப்டடுள்ளனர். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்திலிருந்து புக்கிள் நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருக்கும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 22 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

 Reasi mishap: 22 killed, several injured

தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் பள்ளத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்திய விமானப்படை ஹலிகாப்டர் மூலமாக மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசியில் துரதிருஷ்டவசமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

English summary
At least 22 people were reported killed and several others injured after the bus they were travelling in fell into a gorge at Bidda in Reasi district of the Jammu region on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X