For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தற்காலிக எண்ணை பயன்படுத்த சொல்லும் ஆதார் அமைப்பு.. என்ன நடக்கிறது பின்னணியில்?

இனி ஆதார் எண்ணிற்கு பதிலாக தற்காலிக எண்ணை பயன்படுத்தும் படி ஆதார் அமைப்பு கூறியுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    மீண்டும் மாற்றம் செய்யும் ஆதார் அமைப்பு...என்னதான் நடக்கிறது?- வீடியோ

    டெல்லி: அனைத்தையும் ஆதார் அட்டையுடன் இணையுங்கள் என்ற காலம் போய் தற்போது ஆதார் அட்டைக்கு தற்காலிக எண் வாங்குங்கள் என்று ஆதார் அமைப்பு சொல்ல தொடங்கி இருக்கிறது. இது ஆதார் அமைப்பு மீது பல கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த எண்ணை ஏன் பயன்படுத்த வேண்டும் என்று ஆதார் அமைப்பு ஒரு விளக்கம் கொடுத்துள்ளது. அதுதான் தற்போது ஆதார் அமைப்பு மீது சந்தேகத்தையே உருவாக்கி இருக்கிறது.

    உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அடையாள அட்டை ஏன் இப்போது இப்படி ஆகி இருக்கிறது என்று கேள்விகள் எழும்பி இருக்கிறது. முக்கியமாக மக்களுக்காக ஆதாரா? ஆதாருக்காக மக்களா? என்ற கேள்வியும் துரத்திக் கொண்டு இருக்கிறது.

    ஆதார் தற்காலிக எண்

    ஆதார் தற்காலிக எண்

    ஆதார் அறிமுகப்படுத்தி இருக்கும் தற்காலிக எண் என்பது 16 இலக்கம் கொண்டது. இனி அனைத்து இடங்களிலும் ஆதார் எண்ணை காண்பிக்க தேவையில்லை, அதற்கு பதிலாக இந்த தற்காலிக எண்ணை பயன்படுத்தலாம். இது குறிப்பிட்ட காலத்திற்குள் காலாவதியாகிவிடும் என்பதால் பாதுகாப்பானது. இந்த எண்ணை ஆதார் மையம், இணையதளம், மொபைல் மூலம் பெறலாம்.

    விளக்கம்

    விளக்கம்

    ஆதார் தகவல் திருட்டை தடுக்க இந்த புதிய முறை அறிமுகம் என்று ஆதார் அமைப்பு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. ஏனென்றால் தற்காலிக எண் மூலம் நம்முடைய ஆதார் எண் யாருக்கும் தெரியாது என்று கூறப்படுகிறது. மொபைல் மற்றும் மற்ற நிறுவனங்கள் இந்த ஆதார் விவரத்தை பயன்படுத்த முடியாது என்று கூறியுள்ளது.

    அப்போது இதுவரை

    அப்போது இதுவரை

    இந்த விளக்கம் தான் தற்போது பிரச்சனையை உண்டாக்கி இருக்கிறது. இனி ஆதார் விவரத்தை பாதுகாக்க இந்த திட்டம் அறிமுகம் என்றால் இதுவரை ஆதார் தகவல்கள் பாதுகாப்பு இன்றி இருந்துள்ளதா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. இனி இந்த தற்காலிக எண்ணை கொடுத்தால் போதும் என்று ஆதார் அமைப்பு அழுத்தி சொல்கிறது. இதுவரை ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைத்தவர்கள் கதி என்ன என்று தற்போது கேள்வி எழும்பி இருக்கிறது.

    திருட்டு

    திருட்டு

    ஏற்கனவே பஞ்சாப்பில் ஒரு வாட்ஸ் குழு அனைவருடைய ஆதார் விவரத்தை வெளியிட்டது பிரச்சனையை கிளப்பியது. அந்த பிரச்சனை உருவான இரண்டே நாளில் இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 16 இலக்க எண் என்பது வெறும் 16 இலக்க எண்ணின் பிரச்சனை இல்லை 110 கோடி மக்களின் பிரச்சனை என்பது ஆதார் அமைப்பிற்கு தெரியாமல் இருக்கிறதா?

    English summary
    Aadhaar introduces Virtural ID for instant uses . This virtual id system raises many question in the safety of the Aadhaar card and People's identity.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X