For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலகக் குரல் எழுப்பிய எம்.எல்.ஏ. டிஸ்மிஸ்- ஆம் ஆத்மி அதிரடி!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ வினோத் குமார் பின்னியை நீக்கி அக்கட்சியின் அரசியல் விவகாரங்களுக்கான குழு முடிவு செய்துள்ளது.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாக அக்கட்சியின் முதல்வர் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசை பின்னி தொடர்ந்து விமர்சித்துவந்தார். மேலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ஆம் ஆத்மி அரசைக் கண்டித்து இன்று உண்ணாவிரதம் இருக்கப் போதவாகவும் அவர் கூறியிருந்தார்.

Rebel MLA Vinod Kumar Binny expelled from Aam Aadmi Party

இதையடுத்து, கட்சிக்கு விரோதமாக கருத்து தெரிவித்ததாக, விளக்கம் கேட்டு அவருக்கு ஆம் ஆத்மியின் அரசியல் விவகாரங்களுக்கான குழு நோட்டீஸ் அனுப்பியது. அதைப் பெற்றுக் கொண்ட அவர் கட்சி விதிகள் கூறுவது என்ன என்பதை அறிய, அதன் நகலை அனுப்பி வைக்கும்படி கேட்டிருந்தார். மேலும், எந்த விதியின் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கும்படியும் கேட்டிருந்தார்.

இந்நிலையில், அவரை அதிரடியாக ஆம் ஆத்மி கட்சி நீக்கியுள்ளது.

English summary
The Aam Aadmi Party (AAP) on Sunday expelled rebel legislator Vinod Kumar Binny, who has been criticising the party's Delhi government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X