For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பீர், பீட்சா விற்பனை அதிகரிப்பு.. காரணம் என்ன தெரியுமா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியாவில் அதிகரிக்கும் பீட்சா பீர் விற்பனைக்கு என்ன காரணம்?- வீடியோ

    பெங்களூர்: உலக கோப்பை கால்பந்தாட்டத்தில் யார் வெற்றி பெறுகிறார்களோ, இல்லையோ, பீட்சா மற்றும் பீர் விற்பனை என்னவோ இந்தியாவில் கோல் அடித்துக்கொண்டுள்ளது.

    இளைஞர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் டிவி நிகழ்ச்சி ஐபிஎல் தொடர் மற்றும் உலக கோப்பை கால்பந்தாட்டம்.

    இவ்விரண்டுமே இவ்வாண்டு அடுத்தடுத்து தொடர்ச்சியாக வந்துள்ளன. மே மாதத்தோடு ஐபிஎல் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இப்போது உலக கோப்பை கால்பந்து தொடர் நடந்து வருகிறது.

    குடி கும்மாளம்

    குடி கும்மாளம்

    வீட்டிலேயோ, அல்லது பிஜி ஹாஸ்டல் ரூம்களிலோ, நண்பர்களோடு ஒன்றாக அமர்ந்து கால்பந்தாட்டத்தை இளைஞர்கள் பெருமளவில் ரசித்து வருகிறார்கள். ஐபிஎல் ஆகட்டும், கால்பந்து உலக கோப்பையாகட்டும், இரண்டுமே இந்திய நேரப்படி இரவில்தான் நடக்கிறது என்பது இளைஞர்களுக்கு இன்னும் உற்சாகம் அளிக்கிறது.

    பீட்சா அபாரம்

    பீட்சா அபாரம்

    ஜுபிலன்ட் ஃபுட்வொர்க் லிமிட்டட் நிறுவனம், டொமினோஸ் பீட்சா நிறுவனத்தை நடத்துகிறது. இந்த நிறுவனம் ஏப்ரல் முதல் 19 சதவீத விற்பனை அதிகரிப்பை பார்த்துவருகிறதாம். அந்த நிறுவன மார்க்கெட் மதிப்பு என்பது, கடந்த ஆண்டை ஒப்பிட்டால் 3 மடங்கு அதிகரித்துள்ளதாம். இதேபோல தங்களது பீர் விற்பனையும் அதிகரித்துள்ளது என்கிறது கிங் பிஷர் நிறுவனம்.

    குடி இளைஞர்கள்

    குடி இளைஞர்கள்

    சோஷியல் ட்ரிங்கிங் மற்றும் துரித உணவுகளை உட்கொள்வதில், இந்திய இளைஞர் சமூகம் ஆர்வமாக உள்ளது. இதனால் பீட்சா மற்றும் ஆல்கஹால் விற்பனை அதிகரித்துள்ளது என்கிறார் பிஆர்பி செக்யூரிட்டிஸ் லிமிட்டட் நிறுவனத்தின் ராஜேந்திர வாதேர்.

    இன்னும் இருக்கு கூத்து

    இன்னும் இருக்கு கூத்து

    இப்போதுதான் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஆரம்ப கட்டம். ஆனால், இப்போதே விற்பனை அதிகரித்துள்ள நிலையில், ஆட்டம் அடுத்தகட்டத்திற்கு நகரும்போது இன்னும் அதிக இளைஞர்கள் குடித்தபடியும், சாப்பிட்டபடியும் கால்பந்தாட்டத்தை பார்க்க வாய்ப்புள்ளது என்கிறார், பகுப்பாய்வாளர் மனோஜ் கோரி.

    பீர் விற்பனை

    பீர் விற்பனை

    ஏப்ரல் முதல், யுனைட்டட் பீவரிஸ் நிறுவனம் 25 சதவீத பீர் விற்பனை உயர்வை பார்த்து வருகிறதாம். அந்த நிறுவனத்தின் வரலாற்றில் அதிகபட்ச விற்பனை காலம் இதுதான் என்கிறது புள்ளி விவரம். வருமானம் அதிகம் அதே நேரம் குடும்பத்திற்கு பணத்தை அதிகம் ஒதுக்க தேவையில்லை என்ற நிலையில் உள்ள இளைஞர்கள் அதிகரித்துள்ளது இதற்கான காரணமாம்.

    English summary
    The World Cup, which began weeks after the Indian Premier League cricket season ended in May, has prolonged the dream run for Jubilant Foodworks Ltd., which operates the local franchise of Domino’s Pizza Inc., and Kingfisher beer owner United Breweries Ltd.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X