For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அண்ணன்-தம்பி தொழில் போட்டியால் மக்களுக்கு லாபம்.. ஜியோவுக்கு போட்டியாக ரிலையன்ஸ் அசத்தல் ஆஃபர்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு போட்டியாக ரூ.148-க்கு 70 ஜிபி டேட்டாவை வழங்குவதாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் அறிவித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு போட்டியாக ரூ.148-க்கு 70 ஜிபி டேட்டாவை வழங்குவதாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் அறிவித்துள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை கவருவதற்காக 6 மாதத்துக்கு இலவச வாய்ஸ் கால்கள், டேட்டா என பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அதிலும் முதல் 3 மாதங்களுக்கு வழங்கப்பட்ட இந்த இலவசங்களை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்தார்.

Reliance Communications is now offering 70GB 4G data at Rs 148

இதனால் ரிலையன்ஸ் ஷோரூம்களில் மணிக்கணக்கில் வரிசைகளில் நின்ற வாடிக்கையாளர்கள் முண்டியடித்துக் கொண்டு இந்த ஜியோ சிம் கார்டை வாங்கினர். இந்நிலையில் ரூ.99-க்கு ரீசார்ஜ் செய்யும் பிரைம் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது.

மேலும் தற்போது ரூ.309-க்கு 3 மாதங்களிக்கு இலவச டேட்டா மற்றும் கால்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து அனைவரும் அந்த திட்டத்தில் இணைந்தனர். இதற்கு முக்கிய காரணம் இணையதளத்தின் வேகம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் ஜியோவை விஞ்சும் அளவுக்கு தற்போது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.148-க்கு 70 ஜிபி டேட்டாவை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன்படி வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1ஜிபி 4ஜி டேட்டா 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

டேட்டா மட்டுமல்லாமல் ரூ.50 டாக்டைமும் கூடுதலாக வழங்கப்படுகிறது. இத்துடன் நிமிடத்திற்கு 25 பைசா என்ற கட்டணத்தில் அனைத்து நெட்வொர்களுக்கும் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

இலவசங்களால் தங்கள் தொழில் பாதிக்கப்படுகிறது என்று வழக்கு தொடர்ந்த வோடபோன் நிறுவனமும் தற்போது 1 ஜிபி டேட்டா வழங்கும் சிறப்பு திட்டங்களை வழங்கி வருகிறது.

English summary
Reliance Communications’ new plan falls under its Super Value tariff plan and offers 70 GB of 4G data for 70 days at just Rs 148.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X