For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இருப்பதிலேயே ஜியோ நெட்தான் ரொம்ப ஸ்லோ.. அம்பலப்படுத்திய டிராய்

By Veera Kumar
Google Oneindia Tamil News

மும்பை: ஜியோ சிம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மனதை கல்லாக்கிக் கொண்டு இந்த தகவலை படிக்கவும். தகவல் தொழில்நுட்ப புரட்சி செய்யப்போவதாக கூறிக்கொண்டு சந்தையில் காலடி எடுத்து வந்த உங்கள் அபிமான ஜியோ சிம்தான், இருப்பதிலேயே குறைந்த இணைய வேகம் கொண்டதாம். இதை தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெப்சைட் அதிகாரப்பூர்வமாகவே கூறியுள்ளது.

இணையதள வேகத்தை கண்டறிய டிராய் அறிமுகப்படுத்திய ஸ்பீட் வெப்சைட்டில்தான் இத்தகவல் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ சராசரி டவுன்லோடு வேகம் 6.2Mbps ன்ற அளவில் உள்ளது. இதனால் தேசிய அளவு நெட் ஸ்பீடில் 5வது இடம்தான் ஜியோவுக்கு.

Reliance Jio 4G Speed Slowest in India: Trai

ஏரியாவுக்கு தக்கபடி ஸ்பீட் மாறுபடுகிறது. டெல்லி சர்க்கிளில் ஜியோ வேகம் 5.9Mbpsஎன்ற அளவிலுள்ளது. மும்பையில் 10.7 எனும் வகையில் வேகம் அதிகமாக உள்ளது. இருந்தாலுமே, மும்பை சர்க்கிளில் வேக அடிப்படையில், ஜியோவுக்கு 2வது இடம்தான்.

பெங்களூர் எனும் பெரிய மார்க்கெட்டை வைத்திருந்தாலும், கர்நாடக சர்க்கிளில் ஜியோ வேகம் 7.5Mbps என்ற அளவில்தான் உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் ஜியோவுக்கு போதிய அளவு டேட்டா தர முடியவில்லை என்பது இதில் மற்றொரு சோகம்.

அதேபோல அப்லோடு வேகத்திலும், ஜியோ பின்தங்கியே உள்ளது. அப்லோடு வேகம் 2.6 Mbps என்ற அளவில்தான் உள்ளது. இந்திய அளவில் இந்த பிரிவில் 6 வது இடத்துக்குத்தான் வர முடிந்துள்ளது ஜியோவால். ஜியோவைவிட குறைந்த அப்லோடு வேகம் கொண்ட நெட்வொர்க் நிறுவனம் எது தெரியுமா? அது முகேஷ் அம்பானியின் சகோதரரான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்தான். அதன் அப்லோடு வேகம் 2.1Mbps

ஜியோவின் அப்லோடு வேகம் டெல்லி மற்றும் மும்பையில் 2.3Mbps மற்றும் 3 Mbps என்ற அளவிலும், கர்நாடகாவில் 2.6Mbps என்ற அளவிலும் உள்ளது.

மற்ற நிறுவனங்கள் லிமிட்டட் அளவு நெட் தருவதால் அவர்களுடைய வேகத்தோடு தங்களுடையதை ஒப்பிடுவது சரியானதாக இருக்காது என்கிறது ஜியோ தரப்பு.

English summary
Reliance Jio users do not get much in terms of upload speeds either, as the network is only the sixth-fastest in India and offers average upload speed of 2.6Mbps over 4G.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X