For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி.. ஜியோ ப்ரைம் திட்டத்தில் இணைய கால அவகாசம் நீட்டிப்பு

By Karthikeyan
Google Oneindia Tamil News

மும்பை: ஜியோவில் ரூ.99 செலுத்தி ப்ரைம் உறுப்பினர் ஆவதற்கான கால அவகாசம் ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ கடந்த செப்டம்பர் மாதம் இலவச டேட்டா, இலவச வாய்ஸ்கால்களை அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. டிசம்பர் மாதத்துடன் முடிவடைய வேண்டிய இந்தத் திட்டம் கூடுதலாக மேலும் 3 மாதங்களுக்கு அதாவது, மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.

 Reliance Jio extends Prime membership till April 15

அதன்படி இலவச சேவைகள் இன்றுடன் நிறைவு பெறவுள்ளது. இதையடுத்து இலவச சலுகைகள் முடிந்த பிறகு, ரூ.99 செலுத்தி ஜியோ ப்ரைம் திட்டத்தில் உறுப்பினராகி, அதன் சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று ஜியோ ஏற்கெனவே கூறி இருந்தது.

இந்நிலையில், வருகின்ற 15-ம் தேதி வரை ஜியோ ப்ரைம் உறுப்பினர் ஆகலாம் என்று ஜியோ அறிவித்துள்ளது. மேலும், ரூ.99 (ப்ரைம் உறுப்பினர்) மற்றும் ரூ.303 செலுத்தினால் (15-ம் தேதிக்குள்) அடுத்து மூன்று மாதத்துக்கு ஜியோ முற்றிலும் இலவசம் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் நலனுக்காக, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜியோ கூறியுள்ளது.

தற்போது 7.2 கோடி வாடிக்கையாளர்கள் ஜியோவில் கட்டணம் செலுத்தி உறுப்பினர்கள் ஆகியுள்ளனர். ஜியோவில் ரூ.99 செலுத்தி பிரைம் உறுப்பினர் ஆவதற்கான கால அவகாசம் ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

English summary
Reliance Jio today extended its prime membership enrollment service to April 15.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X