For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜியோ ஸ்பீடு.. மீண்டும் நம்பர் 1 என சர்டிபிகேட் கொடுத்தது டிராய்!

மொபைல் டேட்டா வேகத்தில் ஜியோ மீண்டும் முதலிடத்தில் உள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: மொபைல் டேட்டா வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ மீண்டும் முதலிடத்தில் உள்ளதாக டிராய் சர்டிபிகேட் வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ மொபைல் டேட்டா சேவை தொடங்கிய இரண்டு மாதங்கள் வரை மோசமான இணையதள சேவையை வழங்கியதாக விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து 2017ஆம் ஆண்டு தொடங்கியது முதல் ஜியோ நேரம் தூக்கலாகவே இருந்து வருகிறது.

4ஜி தொழில் நுட்பத்தில் ஜியோ மொபைல் டேட்டாவின் டவுன்லோடு ஸ்பீடு தொடர்ந்து முதலிடத்திலேயே இருந்து வருகிறது. இதனை தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை நிறுவனமான டிராய் தெரிவித்துள்ளது.

முதலிடத்தில் ஜியோ

முதலிடத்தில் ஜியோ

இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்துக்கான மை ஸ்பீடு என்ற மொபைல் டேட்டாக்களின் டவுன் லோடு ஸ்பீடை டிராய் நிறுவனம் நேற்று அறிவித்தது. அதில் சராசரியாக 18.654 எம்பிபிஎஸ் டவுன் லோடு ஸ்பீடுடன் ஜியோ முதலிடத்தில் உள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.

6வது முறையாக

6வது முறையாக

இதன் மூலம் தொடர்ந்து ஆறாவது முறையாக முதலிடத்தில் இருக்கும் பெருமையை பெற்றுள்ள ஜியோ. இருபினும் மே மாதம் இருந்த 18.809 எம்பிபிஎஸ் ஸ்பீடில் இருந்து ஜியோ குறைந்திருப்பதாகவும் டிராய் தெரிவித்துள்ளது.

வோடாபோன் 2வது இடம்

வோடாபோன் 2வது இடம்

11.070 எம்பிபிஎஸ் ஸ்பீடுடன் வோடாபோன் இரண்டாவது இடத்தில் இருப்பதாக டிராய் அறிக்கை தெரிவிக்கிறது. இதைத்தொடர்ந்து 9.465 எம்பிபிஎஸ் ஸ்பீடுடன் ஐடியா செல்லுலர் மூன்றாவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல்லை விட இருமடங்கு

ஏர்டெல்லை விட இருமடங்கு

8.916 எம்பிபிஎஸ் ஸ்பீடுடன் பார்தி ஏர்டெல் நான்காவது இடத்தில் உள்ளது. ஏர்டெல்லை விட இருமடங்கு வேகத்துடன் ஜியோ மொபைல் டேட்டா சேவையை வழங்கி வருகிறது.

மாதம் தோறும் குறைகிறது

மாதம் தோறும் குறைகிறது

முதல்முறையாக கடந்த ஏப்ரல் மாதம் எப்போதும் இல்லாத அளவுக்கு 19.12 எம்பிபிஎஸ் வேகத்தில் ஜியோ தனது மொபைல் டேட்டா சேவையை வழங்கியது. ஜியோவின் சராசரி வேகம் மாதம் தோறும் குறைந்து வருவதாகவும் டிராய் தெரிவித்துள்ளது.

அப்லோடு வேகம் மோசம்

அப்லோடு வேகம் மோசம்

ஆனால் அப்லோடு வேகத்தில் ஜியோ 4வது இடத்தில் உள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது. ஐடியா 6.238 எம்பிபிஎஸ் வேகத்துடன் முதலிடத்தில் உள்ளது.

ஏர்டெல் 3வது இடம்

ஏர்டெல் 3வது இடம்

வோடாபோன் 6.050 எம்பிபிஎஸ் வேகத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது ஏர்டெல் 4.564 எம்பிபிஎஸ் வேகத்துடன் மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் டிராய் தெரிவித்துள்ளது.

3ஜியில் வோடாபோன் நம்பர் 1

3ஜியில் வோடாபோன் நம்பர் 1

அதேநேரத்தில் 3 ஜி தொழில் நுட்பத்தில் டவுன் லோடு ஸ்பீடில் 5.168 எம்பிபிஎஸ் வேகத்துடன் வோடாபோன் முதலிடத்திலும் ஐடியா இரண்டாவது இடத்திலும் ஏர்டெல் மூன்றாவது இடத்திலும் உள்ளது என்றும் டிராய் தெரிவித்துள்ளது. 3ஜி தெழில்நுட்பத்தில் அப்லோடு ஸ்பீடிலும் வோடாபோன்தான் முதலிடத்தில் உள்ளது என்றும் டிராய் அறிவித்துள்ளது.

English summary
Reliance Jio has now topped the TRAI’s MySpeed portal report for a sixth consecutive time, beating incumbent operators hands down. TRAI released the data collected by its My Speed app for the month of June 2017 late yesterday, in which Reliance Jio topped the chart with an average download speed of 18.654 Mbps.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X