For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உகாதிக்கு நோ லீவ்... ஏப்ரல் 1 வரை வங்கிகள் விடுமுறையின்றி பணியாற்ற ரிசர்வ் வங்கி உத்தரவு

மார்ச் 25 முதல் ஏப்ரல் 1ஆம் தேதிவரை வங்கிகள் விடுமுறையின்றி பணியாற்றுங்கள் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: சனி, ஞாயிறு, உகாதி பண்டிகைக்கு வங்கிகள் விடுமுறை விட வேண்டாம் என்றும், ஏப்ரல் 1ஆம் தேதி வரை விடுமுறையின்றி பணியாற்றுங்கள் என்றும் நாடுமுழுவதும் உள்ள வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

வங்கிகளுக்கு ஞாயிறு மற்றும் மிக முக்கிய பண்டிகை நாட்களில் விடுமுறை விடப்படும். நவம்பர் 8ஆம் தேதி உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது சனி, ஞாயிறு, பண்டிகை நாட்களின் கூட விடுமுறை எடுக்காமல் பணியாற்றினர். இந்த நிலையில் இன்னும் 6 தினங்கள் அதாவது மார்ச் 25 முதல் ஏப்ரல் 1 வரை விடுமுறை எடுக்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

Remain open on all days till April 1: RBI tells banks

2016 -17 ஆம் நிதியாண்டு முடிய இன்னும் 6 நாட்களே உள்ளன. இந்த நிலையில் நிறுவனங்கள் வரிநிலுவைகளை செலுத்த வேண்டும். எனவே வங்கிகள் விடுமுறையின்றி செயல்படுமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

சனி, ஞாயிறு, உகாதி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கூட ரிசர்வ் வங்கியின் அனைத்து கிளைகளும், தனியார் வங்கிகளும் திறந்து வைத்திருக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் திடீர் அறிவிப்பு வங்கி ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The Reserve Bank of India has asked all agency banks all public sector banks and some private banks to remain open on all days between March 25 and April 1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X