For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு பணி, பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு என்பது கட்டாயமல்ல.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அரசு பணிகள் மற்றும் அரசு பணியில் வழங்கப்படும் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடை பின்பற்ற வேண்டிய கட்டாயம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: அரசு பணிகள் மற்றும் அரசு பணியில் வழங்கப்படும் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடை பின்பற்ற வேண்டிய கட்டாயம் கிடையாது, அரசு பணிகளில் இடஒதுக்கீடு என்பது எஸ்.சி. எஸ்.டி. பிரிவினருக்கோ அல்லது ஓபிசி பிரிவினருக்கோ அடிப்படை உரிமை கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

உத்தரகாண்ட் மாநில அரசு சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.கடந்த 2012ம் ஆண்டு அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டது. அதேபோல் 2000 க்கும் அதிகமான நபர்களுக்கு அப்போது பதவி உயர்வு வழங்கப்பட்டது. எஸ்.சி. எஸ்.டி. ஓபிசி இடஒதுக்கீடு எதையும் பின்பற்றாமல், இந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டது.

Reservations for SC/ST/OBC is not a fundamental right in Govt Jobs and Promotions says SC

இதற்கு எதிராக உத்தரகாண்ட உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் முடிவில், எஸ்.சி. எஸ்.டி. ஓபிசி பிரிவினருக்கு அரசு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். இவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதற்கு எதிராக மாநில அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கில்தான் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு பணிகள் மற்றும் அரசு பணியில் வழங்கப்படும் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடை பின்பற்ற வேண்டிய கட்டாயம் கிடையாது. அரசு பணிகளில் இடஒதுக்கீடு என்பது எஸ்.சி. எஸ்.டி. பிரிவினருக்கோ அல்லது ஓபிசி பிரிவினருக்கோ அடிப்படை உரிமை கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா ஆகியோரை கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அதன்படி இடஒதுக்கீடு என்று அரசு பணிகளில் அடிப்படை உரிமை கிடையாது. சட்டத்தின் 16ஆவது பிரிவிலுள்ள 4ஆவது உட்பிரிவு, 4 ஏ உட்பிரிவு ஆகியவற்றில் இட ஒதுக்கீடு அளிக்காமல் பணி இடங்களை நிரப்ப முடியும்.

ஒரு அரசு பணியில் குறிப்பிட்ட ஜாதியினருக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்றால் மட்டும்தான் இப்படி இடஒதுக்கீடு அளிக்கலாம். இதற்கான ஆதாரங்கள் இருக்க வேண்டும். அப்படி பிரதிநிதித்துவம் இல்லை என்பதற்கான ஆதாரம் இல்லை என்றால் இடஒதுக்கீடு வழங்க கூடாது. இதை மீறி அரசு செயல்பட்டால் அதற்கு எதிராக வழக்கு தொடுக்கலாம்.

இடஒதுக்கீடு இல்லாமல் பணியிடங்களை நிரப்ப அரசுக்கு உரிமை உள்ளது. இடஒதுக்கீடு இன்றி அரசு பணிகளை நிரப்ப உத்தரகாண்ட் அரசு பிறப்பித்த அறிவிப்பு செல்லும் என்றுள்ளனர். மேலும் இடஒதுக்கீடு வழங்கும்படி மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

English summary
Reservations for SC/ST/OBC is not a fundamental right in Govt Jobs and Promotions says Supreme Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X