வேட்பாளர்களை ரிசார்ட்டில் அடைத்த காங்..அவங்க மேல அவங்களுகே நம்பிக்கையில்லை.. சாடும் கோவா முதல்வர்..!
பானஜி : கோவாவில் தொங்கு சட்டசபை அமையலாம் என கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில் வேட்பாளர்களை தக்க வைப்பதற்காக , காங்கிரஸ் கட்சி தங்கள் வேட்பாளர்களை பானஜி அருகே சொகுசு விடுதியில் மொத்தமாக தங்க வைத்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கூட அவர்கள் வட மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
கோவாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
மகன் பிறக்காத கோபம்.. பிறந்து 7 நாளேயான மகளை துப்பாக்கியால் சுட்டு கொன்ற கொடூர தந்தை!
40 சட்டசபை தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 21 இடங்களில் வெல்ல வேண்டும்.

கோவா தேர்தல்
அதை ஒட்டுமொத்தமாக வைத்து பார்க்கும் போது எந்த ஒரு கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லாத நிலையே உள்ளது. அதாவது கடந்த முறை போன்று இந்த முறையும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. கோவாவில் நிறைய செய்தி நிறுவனங்கள் கருத்து கணிப்புகளை நடத்திய நிலையில் இதே போல் தான் முடிவுகள் உள்ளன.

தொங்கு சட்டசபையா?
இடிஜி ரிசர்ச், இந்தியா டிவி, டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட பல நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்புகளின் அடிப்படையில் சராசரியாக பாஜக 17-20 இடங்களிலும் காங்கிரஸ் 15-17 இடங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் 3-4 இடங்களிலும் வெல்லும். இந்தியா நியூஸ் செய்தி நிறுவனத்தின் கருத்து கணிப்பில் பாஜக 13-19 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 14-19; இடங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் 3-5 இடங்களிலும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் அச்சம்
இந்நிலையில் 2017-ம் ஆண்டு கோவாவில் ஆட்சி அமைக்க முடியாமல் போனதால், 2017-ம் ஆண்டு ஏற்பட்ட படுதோல்வி மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் பனாஜி அருகே உள்ள பாம்போலிம் கிராமத்தில் உள்ள சொகுசு விடுதியில் காங்கிரஸ் தங்க வைத்துள்ளது. குதிரை பேரம் நடக்காமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கூட அவர்கள் வட மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக விமர்சனம்
சில வேட்பாளர்கள் நாளை வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், அவர்களின் வாக்கு எண்ணும் முகவர்கள் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ள நிலையில், இதனை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து பேசிய கோவா முதல்வர் பிரமோத் சவாந்த் தங்கள் கட்சியினரையே காங்கிரஸ் கட்சியால் நம்ப முடியவில்லை எனவும், ஆட்டு மந்தையை போல் அவர்களை அடைத்து வைத்துள்ளதாக கூறியுள்ளார்.